புதன், 11 டிசம்பர், 2024

பாரதிக்கும் ஆனந்திற்கும் ஒரு பிறந்த நாள் வாழ்த்து வெண்பா

பாரதிப வானந்த பன்னறிவுப் பாதைவகு
பாரதப் போரேறே பல்லுலகுந் - தீரறிந்த
வாரிதியே வாழ்த்துரைப்பேன் வையநீ வந்ததினந்
தூரிகையாற் சொல்லை வரைந்து

#வெண்பா #சிலேடை



இவ்வாறு சீர் பிரித்தால் பொருள் ஒன்று-


பார் அதிப ஆனந்த பன்னறிவுப் பாதைவகு
பாரதப் போர் ஏறே பல் உலகும் தீர் அறிந்த
வாரிதியே வாழ்த்துரைப்பேன் வையம் நீ வந்த தினம்
தூரிகையால் சொல்லை வரைந்து

World Champion Viswanathan Anand, who carved a unique path with his research bent of mind, India’s warrior lion, who is known throughout the world and is considered to be an ocean (of knowledge and experience), I wish you on your birthday using words as my medium to paint

பார் அதிபன் can denote both world champion or as his name denotes Viswanathan- ruler of the world, பன்னறிவு indicates an intellect that has research capabilities, also befitting a 'pun' poem :-)

இவ்வாறு சீர் பிரிக்கப் பொருள் இரண்டு 


பாரதி பவானனந்த பன்னறிவுப் பாதைவகு
பாரதப் போர் ஏறே பல் உலகும் தீர் அறிந்த
வாரிதியே வாழ்த்துரைப்பேன் வையம் நீ வந்த தினம்
தூரிகையால் சொல்லை வரைந்து

Bharathi, you wanted the welfare of the world, you had a mighty intellect, and you carved a unique path oh fighting lion of India, you knew about the whole world's happenings and were an ocean of knowledge, I wish you on the day of your appearance on earth, using words as the medium to paint.


பாரதியும் ஆனந்தும் ஒரே நாளில் (December 11th) பிறந்ததால் ஒரே பாவால் வாழ்த்துச் சொல்ல விழைந்தேன் 


Vishy Anand and Mahakavi Bharathi share the same birthday on December 11, a single poem is written as a wish to both of them!

 

 படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...