ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ

ஏது மற்றவர் ஏழை எளியவர்
ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக
ஈரி லற்றவர் ஏக சொற்றவர்
வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா
மாதை யற்றதோ ரூறை யற்றுற
ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ
வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி
ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...