செவ்வாய், 10 டிசம்பர், 2024

இம்மை செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

இம்மை மறுமை யிரண்டு மருள்புரிந்து
நம்மை வழிநடத்து நாயகன் - செம்மை
யுருவன் சிரமா றுடைய னமரு
மொருமயிலை யுள்ளநிறை யோர்ந்து

#வெண்பா



இம்மை மறுமை இரண்டும் அருள்புரிந்து
நம்மை வழி நடத்தும் நாயகன் - செம்மை
உருவன் சிரம் ஆறு உடையன் அமரும்
ஒரு மயிலை உள்ளம் நிறை ஓர்ந்து

 #முருகன் 


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...