புதன், 29 ஜனவரி, 2025

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற்
கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின்
ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடைந்து
காட்டை யடையாது காலம் வசமாகக் கைவருமே

 

 சீர் பிரித்து

தோட்டை மதி ஆக்கித் தொண்டனைக் காப்பாள் துணை இருந்தால்

கூட்டைத் திரு வாழும் கோவிலாய் ஆக்கலாம் கூற்றவனின்

ஏட்டை அழித்து ஆண்டு இளமை நிலைக்க வழி அடைந்து

காட்டை அடையாது காலம் வசமாகக் கை வருமே

 

பொருள்

தனது தொண்டனான அபிராமி பட்டர்க்கு அவரது வாக்குப் பலித்து நற்கதி அடைய அமாவாசையை முழுநிலவாக்கத் தன் தோட்டை மதி ஆக்கிய அபிராமி அன்னை துணை இருப்பின், நமது உடலான கூட்டை அவள் வாழும் கோயில் ஆக்கலாம் , கூற்றவன்றன் ஏடான நமது விதிக் கணக்கை அழித்து ஆண்டு இளமை என்றும் நிலைக்கும் வண்ணம் செய்து சுடு காட்டை அடையாது காலமே நம் வசமாக அன்னை அருள்வாளன்றோ 


If we have the grace of the Goddess Abirami who made her ear ring as a full moon in the sky in order to save her devotee, we can make our body as the living temple of hers, change Yama's book of our destiny and living with everlasting youthfulness as an immortal without having the need to die and make time our ally! 

 

🌑தை அமாவாசை🌕 🔱அபிராமி பட்டர் எனும் பக்தனின் வார்த்தையை மெய்ப்பிக்க அன்னை  அபிராமி தனது காதணியை கழற்றி வானில் வீசி அமாவாசை நிலவினை ...

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...