மறையோது மன்பர்க்கு மறைபொருளு நீயே
மதிகொஞ்சு மன்புக்கு மதிகாரி நீயே
குறையேது மெங்கட்குக் கிடையாது தாயே
குறைதீர்க்கு முன்குமரன் கொடுத்துவைத் தாயே
முறையேது நாமறியோ முனையேத்தத் தாயே
மூலத்தின் கனலாக வொளிந்துறங்கு தாயே
பறைவேண்டும் பத்தர்க்குப் பணிவளிக்குந் தாயே
பரைவேண்டும் பத்தர்க்குப் பரமானாய் நீயே
-எண்சீர் விருத்தம்
சீர் பிரித்து
மறை ஓதும் அன்பர்க்கு மறைபொருளும் நீயே
மதி கொஞ்சும் அன்புக்கும் அதிகாரி நீயே
குறை ஏதும் எங்கட்குக் கிடையாது தாயே
குறை தீர்க்கும் உன் குமரன் கொடுத்து வைத்தாயே
முறை ஏதும் நாம் அறியோம் உனை ஏத்தத் தாயே
மூலத்தின் கனலாக ஒளிந்து உறங்கு தாயே
பறை வேண்டும் பத்தர்க்குப் பணிவு அளிக்கும் தாயே
பரை வேண்டும் பத்தர்க்குப் பரம் ஆனாய் நீயே
For the devotees who chant the vedas you are the veiled object, you are the controller of the beauty that arises in the mind, we do not have any problems whatsoever as you have sent your son Kumaran to set it all right, We do not know the method to worship you, you remain as the dormant fire in the mooladhara chakra , you grant humility to those who wish to serve you and you remain the supreme being for those who want and worship you oh Godess ParaShakti!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக