வெள்ளி, 10 ஜனவரி, 2025

வேதம் விருத்தம்

வேதந் தமிழ்செய்த மாறன் 

      வேலை கடந்தாண்ட தூதன்
 

மோதும் பகைபோக்கு நேமி 

      யோகத் தமர்ந்தாளு சிங்கஞ்
 

சீதை யிளையனோடி ராமன் 

           சீதத் திருவாழு மார்பன்
 

பாதந் தொழும்பேறைப் பெற்றேம் 

                பாவம் பொடியாகு மன்றே

 

அறுசீர் விருத்தம்

சீர் பிரித்து 

வேதம் தமிழ் செய்த மாறன் 

வேலை கடந்து ஆண்ட தூதன்

மோதும் பகைபோக்கும் நேமி

யோகத்து அமர்ந்து ஆளும் சிங்கம்

சீதை இளையனோடு இராமன்

சீதத் திருவாழும் மார்பன்

பாதம் தொழும் பேறைப் பெற்றேம்

பாவம் பொடி ஆகும் அன்றே

 

(அருள்மிகு கோதண்ட விராமர் கோவில் நந்தம்பாக்கம்)

நம்மாழ்வார், ஆஞ்சனேயர் . சக்கரத்தாழ்வார் , யோக நரசிம்மர், ஸ்ரீனிவாச பெருமாள், கோதண்ட இராமர் ஆகியோரின் திருவடியைச் சேவிக்க பெற்றோம் , நமது பாவங்கள் பொடியாவது உறுதி அன்றோ

On this auspicious day of Vaikunta Ekadashi, having acuired the fortune of seeing the holy feet of Nammazhwar, Hanuman, Chakkarathazhwar, Yoga Narasimhar, Srinivasa Perumal and Kodhanda Ramar with Seethai and Lakshmanar , wont our sins be washed away!

 

அருள்மிகு கோதண்ட இராமர் திருக்கோவில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...