மதிவா ணுதலு மலர்விழியுஞ் சற்று
முதிரா குழலு மொளிரெயிறுங் கொவ்வை
யிதழு யிளமுலையுங் காணா ரிழந்தார்
மதிமருட்டு மிம்மா மயக்கு
மதி வாள் நுதலும் - மதியைப் போன்ற ஒளிரும் நெற்றியும்
மலர்விழியும் -மலரைப் போன்ற கண்களும்
சற்றும் உதிரா குழலும்- வலிமை மற்றும் அழகான கூந்தலும்
ஒளிர் எயிறும் - ஒளிர்கின்ற பற்களும்
கொவ்வை இதழும் - கொவ்வைப் பழம் போன்ற் உதடுகளும்
இள முலையும் - இளமையான முலைகளும்
காணார் இழந்தார் - காணாதவர்கள், காதலின்பத்தின் சுவை அறியாதவர்கள் இழந்தவர்கள் ஆவர்
மதிமருட்டும் - நல்ல மதியைக் கூடக் கலங்கச் செய்யும்
இ மா மயக்கு - ஒரு பெண்ணின் பால் வைக்கும் காதலென்னும் பெரிய மயக்கம்!
ஒரு பெண்ணின் அழகின் உயர்வையும் அதே சமயம் அக்காதல் வயப்பட்டவர்கள் எவ்வாறு மதி மயக்கும் உறுவார்கள் என்றும் உரைக்கப் பட்டது . அது மயக்கமே எனினும் அதை இழந்தவர்கள் இவ்வாழ்வின் ஒரு இன்றியமையா அங்கத்தை இழக்கின்றனர் என்பது கருத்து
madhi vaa Nudhalum malar vizhiyun jatrum
udhirak kuzhalum oLireyiRum kovvai
idhazhum iLamulaiyum kaaNaar izhandhaar
madhimaruttum immmaa mayakku
Those who have not experienced the beauty of a woman's moonlike bright forehead, flower like eyes, strong and beautiful hair which does not wither even a bit, ruddy lips like the fruit of ivy gourd, tender bosoms have missed out on a bewilderment that even beffudles a mighty intellect!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக