புதன், 3 செப்டம்பர், 2025

நாராயணன் துதி (அஷ்டகம்)

 (நாராயண நாராயண நாராயண என்போம்) 

1. 

தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்திரு மேனித்தலை வன்றன் ஓராயிர நாமந்தனி லொன்றிற்கரை வோமே

 

தீரா வினை பாழாய் விழப் பால் ஆழியில் என்றும்

ஏரார் விழி பாதம் பிடி பாம்பின் குடை துஞ்சும் 

கார் ஆர் முகில் வண்ணத் திரு மேனித் தலைவன்றன்

ஓர் ஆயிரம் நாமம் தனில் ஒன்றில் கரைவோமே 

 

தீராத வினைகள் கூட பாழாய் விழும் யாது நாம் பாற்கடலில் என்றும் அழகிய விழிகளையுடை திருமகள் தனது பாதத்தை வருடி விட ஆதி சேஷன் குடையின் கீழ் அறிதுயிலும் கருநிற மேகத்தை ஒத்த திருமேனி உடைய தலைவனான நாராயணின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றுடன் மகிழ்ந்து கரையுங்கால்!

Even the unbeatable Karmas can fall apart into nothingness when we get attuned to atleast one of the thousand names of the Lord Narayana who has a black hue like the rain clouds and who sleeps on the milky ocean under the Sesh Nag while the beautiful eyed Lakshmi keeps massaging his feet

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

2. 

செந்தாமரை நாணத்தகு வண்டாடிடு கண்ணே பந்தார்விரற் பூவைத்திரு கொண்டாடிடு மார்பே அந்தாமரை வேதாவரு தண்டாமரை யுந்தி நொந்தாருயிர் பேறேதரு வண்டம்வளர் தாளே 

 

செம் தாமரை நாணத் தகு வண்டு ஆடிடு கண்ணே

பந்து ஆர் விரல் பூவை திரு கொண்டாடிடு மார்பே

அம் தாமரை வேதா வரு தண் தாமரை உந்தி

நொந்தார் உயிர் பேறே தரு அண்டம் வளர் தாளே 

 

செந்தாமரை கூட நாணம் கொள்ளும் விதமாக வண்டு ஆடிடும் கண்களை உடையவன், பந்து விளையாடும் அழகிய விரல்களையுடைய ஸ்ரீ தேவி கொண்டாடிடும் மார்பை உடையவன், அழகிய தாமரை மலரோனான பிரமன் உதிக்கக் காரணமாக இருந்த தண்மை பொருந்திய தாமரையைப் போன்ற உந்தியை உடையவன், நொந்த உயிர்கட்கு வீடு பேறு தரக்கூடிய அண்டத்தளவு வளரும் திருவடியை உடையவபன் நாராயணன்

 

Red lotuses too feel shy while seeing his beautiful eyes which attract bees, the beautiful fingered Mahalakshmi always celebrates and lives in his chest, Lord Brahma who has the Lotus for his seat was birthed from the beautiful and cool lotus like navel of Lord Narayana and his feet which can cover the whole universe grant salvation to all devotees in distress !

 

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

3. 

பண்டோதிடு நாலாமறை யென்றுந்தொழு மன்னே வண்டார்குழன் மாவீற்றிரு நெஞ்சத்தழ கென்னே மண்டாவிய விண்டாவிய வெண்டாவிய பொன்னே பண்டாவியு மண்டாதுனைத் திண்டாடுத லென்னே 

 

பண்டு ஓதிடு நாலாம் மறை என்றும் தொழு மன்னே!

வண்டு ஆர் குழல் மா வீற்றிரு நெஞ்சத்து அழகு என்னே!

மண் தாவிய விண் தாவிய எண் தாவிய பொன்னே!

பண்டு ஆவியும் அண்டாது உனைத் திண்டாடுதல் என்னே? 

 

தொன்று தொட்டு ஓதப் படும் நான்மறைகள் என்று தொழுகின்ற மன்னவா, வண்டு ஹ்ரீங்காரமிட்டு மன்னும் அழகிய தலைமுடியை உடைய மஹாலக்‌ஷ்மி வீற்றிருக்கும் அழகை நெஞ்சை உடையவனே, மண்ணும் விண்ணும் இரு அடிகளால் கடந்த்னை, பின்னே அனைவரின் எண்ணத்தையும் கடந்த பொன்னானவனே, பன்னெடுங்காலமாக பல பிறப்பெடுக்கும் சீவர்கள் உன்னை வந்து சேராது திண்டாடுகின்றனரே அது ஏன்?

The eternal Vedas always pray to you oh Narayana, Goddess Mahalakshmi who sports beautifully scented hair which is a place for bees, always stays in your heart, with two feet you traversed the earth and all outer universes and not only that you went beyond all thought too oh Golden one, the old souls who are entwined and suffering in this cycle of birth and death still do not understand that they should just surrender to your lotus feet, why is this? 

 

 

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

4. 

கள்ளத்தன வுள்ளத்துறை கள்ளங்கவர் கள்வா வெள்ளதர வுள்ளிக்கிட வெள்ளத்தகு நிலையோ தெள்ளத்திரு வள்ளித்தரு வுள்ளத்தகு நிலையே பள்ளத்துயி ருள்ளத்தெழ வெள்ளித்திரை துயிலே

 

கள்ளத்தன உள்ளத்து உறை கள்ளம் கவர் கள்வா!

வெள்ளத்து அரவு உள்ளிக் கிடவு எள்ளத் தகு நிலையோ?

தெள்ள திரு அள்ளித் தரு உள்ளத் தகு நிலையே!  

பள்ளத்து உயிர் உள்ளத்து எழ வெள்ளித் திரை துயிலே!

 

கள்ளதனம் உறைந்திருக்கும் உள்ளத்தின் கள்ளத்தைக் கவரும் கள்வனே! பாற்கடலில் பாம்பணையில் கிடந்த வண்ணம் அறிதுயில் கொள்வது என்ன நகைப்புரிய கோலமா என்ன? இல்லை! தெளிவாக அருளை வழங்கும் ஆழ எண்ணத் தக்க நிலையாம் அது! இவ்வாழ்வான பள்ளத்தில் உறைகின்ற உயிர்கள் தம் உள்ளத்தால் எழ வெண்ணிற பாற்கடலில் துயில் கொள்கின்றனை நீ நாராயணா! 

 

You are the thief who steals the deceit from the mind that harbors deceit! The Yoga Nidra (Sleep of awareness) in the milky ocean under the Sesh Nag is it something to be mocked in jest? Not at all! The sleep of awareness in milky ocean is to shower the grace on the devotees and the Jivas who are suffering in depth oh Narayana!

 

 

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

5. 

பூதேவியும் ஸ்ரீதேவியும் பாங்காயுட னணைய நாதேவியு மாதேவியுந் தம்மாசியை யருளச் சூதேவிய வாதாயினுஞ் சார்ந்தாருயர் வுறவே நாதாவுன நாமமிர யாதாயினு நிறைவே 

 


பூ தேவியும் ஸ்ரீ தேவியும் பாங்காய் உடன் அணைய

நா தேவியும் மா தேவியும் தம் ஆசியை அருள

சூது ஏவிய வாது ஆயினும் சார்ந்தார் உயர்வு உறவே

நாதா உன நாமம் இர யாது ஆயினும் நிறைவே

 

பூமிப் பிராட்டியும் திருமகளும் அழகாக உடன் அணையவும், சரச்வதி தேவியும் பார்வதி தேவியும் தமது ஆசியை அருளவும், உனது நாமம் இருக்க யாதாயினும் எமக்கு நிறைவே சூழும் ஏனென்றால் சூதினால் அமைந்த மாபெரும் போராக இருப்பினும் நினது அடியாரைக் காத்து உயர்வுறச் செய்யும் உனது நாமம் அன்றோ! 

You are flanked by the beautiful Bhu and Sri Devis on your side, and Saraswathi and Parvathi Devis too shower their grace. All this power stands in your name, when this is there with us all is well! Even in deceitful war your name alone can save your devotees as we saw in Mahabharatha!  

 

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

 6.

நாகாசல மத்தாயிர நாகாதிப னாணா சாகாதிர தேவாம்ருதந் தேவாசுரர் கடைய ஏகாவுனை வெற்பேந்திட நீராமையின் வடிவா காகாவென மன்றாடிட மேகாவளி மழையே 

 

நாகாசலம் மத்தாய் இர நாகாதிபன் நாணா

சாகாது இர தேவாம்ருதம் தேவாசுரர் கடைய

ஏகா உனை வெற்பு ஏந்திட நீர் ஆமையின் வடிவா

கா கா என மன்றாடிட மேகா அளி மழையே!

 

வானவர்களுக்கு உறைவிடமாய் விளங்கும் மேரு மலை மத்தாக எடுத்து, நாகத் தலைவரான வாசுகியை நாணாக எடுத்து சாகா வரம் தரும் அமுதத்தைக் கடைந்தெடுக்க முன்பொருநாளில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர், ஆனால் அந்நிகழ்வில் மேரு மலையைத் தாங்க வழியின்றி தம்மைக் காப்பதற்கு அழைத்த போது கூர்ம அவதாரம் கொண்டு அம்மலையைத் தாங்கி மேக வண்ணனே நீ உனது அளியை மழையாகப் பொழிந்தனை!

 By taking the Sumeru mountain as the churning rod and the chief of snakes Vasuki as the rope Samudra Mandhan was attempted by the Devas and Asuras to get the elixir of life (Amrit) But the Sumeru mountain needed to be supported and when they called you for help you immediately took the avatar of Kurma and showered your grace like the dark rain clouds oh Dark colured one!

 

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

7. 

தண்டாரணி பத்தானனற் றுண்டாடிய சிலையோ வண்டாவரு சுக்ரர்விழி யெல்லாக்கிய புல்லோ கண்டார்விழி யஞ்சத்தகு சிங்காவுன வுகிரோ அண்டாதிர வெந்தத்துய ருண்டேயுன காப்பே 

 

தண் தார் அணி பத்து ஆனனன் துண்டாடிய சிலையோ

வண்டா வரு சுக்ரர் விழி எல் ஆக்கிய புல்லோ

கண்டார் விழி அஞ்சத் தகு சிங்கா உன உகிரோ

அண்டாது இர எந்தத் துயர் உண்டே உன காப்பே

 

தண்மை பொருந்திய மாலை அணிந்த பத்து முகங்கொண்ட இராவணனைத் துண்டாடிய வில்லோ, வண்டாக உருவெடுத்து மாவலியின் தானத்தைத் தடுக்க நினைத்த அசுர குலகுருவான சுக்கிராச்சாரியார் கண்ணைக் குருடாக்கிய வாமனன் கையாண்ட தர்பைப் புல்லோ, பார்ப்பவரெல்லாம் (பிரகலாதனைத் தவிற) அச்சம் கொள்ளும் வகை உருவெடுத்த நரசிங்கனே உனது நகமோ, எந்தத் துயரும் அண்டாவகை உமது அடியாரான எங்களைக் காக்கும் வண்ணம் நீயும் உனது ஆயுதங்களும் என்றும் எமக்குக் காப்பாக அமையும் நாராயணா!

 

The bow that destroyed the ten faced Ravana who wears cool garlands on his chest, the Dharba grass that made Asura Guru Sukracharya blind in one eye when he took the shape of insect to stop Mahabali from giving his promised sacrifice to Vamana, the nail which destroyed Hiranyakashibu when you emerged as the terrifying Narasimha form are all there to protect us Narayana, so we have nothing to fear! 

 

(நாராயண நாராயண நாராயண என்போம்) 

8. 

எட்டாயிரு சொல்லாவுனை விட்டாலொரு வாழ்வோ எட்டாவிரு வானாதிப குட்டாவென வழைக்க நட்டாரென வந்தாள்பவ நல்லாசியு மருளக் கொட்டாவியு முன்பேர்சொல விட்டாவகை யருளே 

 

எட்டாய் இரு சொல்லா உனை விட்டால் ஒரு வாழ்வோ?

எட்டா இரு வான் ஆதிப குட்ட என அழைக்க

நட்டார் என வந்து ஆள்பவ நல் ஆசியும் அருள 

கொட்டாவியும் உன் பேர் சொல இட்டா வகை அருளே!

 

அஷ்டாக்‌ஷர வடிவாய் உள்ளவனே உன்னை விட்டால் எமக்கேதும் வாழ்வுண்டோ? எட்டாத் திருநாடான வைகுந்தத் தலைவனே உன்னைக் குட்டா (சிறுவனே) என்றழைக்க நண்பராகக் கருதி நீ உடனே வந்து எமை ஆண்டு நல்லாசியையும் தருவாய் என்பதை அறிவோம், ஆதலால் உனது நினைவே மறவா வண்ணம் கொட்டாவி வரும் போதும் உனது பெயரே எமது சிந்தனையில் வரும் வகை அருள்வாயாக நாராயணா! 

Oh Narayana you are the form of Ashtakshara (eight syllables), do we have any life if we do not get attuned with you? Even though you are the Lord of Vaigundha which is beyond the reach of even the celestials, if we call you as our child you will immediately assume the Bhava of a friend and due to your sowlabhya come and shower your grace upon us, So all we want is never to forget you even for a moment, so let us keep remembering your name even while we yawn oh Narayana!

 

 

 

 

 

 

 

 

 

 

 

படம்படம்படம்படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி