வானளந்து மண்ணளந்து கோனடங்க நின்றவை
வானுறைந்த நீரடங்க மானுடர்க்குத் தந்தவை
நானொடுங்க மாபெருத்து மூன்றடுக்குச் சென்றவை
மானடத்து மாணியாளு மொப்பிலாத பாதமே
வான் அளந்து மண் அளந்து கோன் அடங்க நின்றவை
வான் உறைந்த நீர் அடங்க மானுடர்க்குத் தந்தவை
'நான்' ஒடுங்க மா பெருத்து மூன்றடுக்குச் சென்றவை
மால் நடத்தும் மாணி ஆளும் ஒப்பு இ(ல்)லாத பாதமே
Those which measured, space, earth and the king! Those which pacified the celestial Ganges and brought it to humanity, those which subdued the ego (of the King Mahabali) by growing in gigantic size and measured thrice, are the peerless feet of the deluding student (Vamana)
ஓவியம் தீட்டியது கவிஞர் இமயவரம்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக