புதன், 23 அக்டோபர், 2024

மண்ணுளோர் கலி விருத்தம்

மண்ணுளோர் பிறப்பறுக்கு மண்ணளந்த நின்கழல்
விண்ணுளோர் பிணக்கறுக்கும் விண்ணளந்த நின்கழன்
மண்ணுளே மறைந்தலோக மன்னுமன்ன னாக்குமே
பண்ணுளே யடங்கவல்ல பண்புடைத்த பாதமே   
#கலிவிருத்தம் 

 

 சீர் பிரித்து :-

மண்  உ(ள்)ளோர் பிறப்பு அறுக்கும் மண் அளந்த நின் கழல் 

விண் உ(ள்)ளோர் பிணக்கு அறுக்கும் விண் அளந்த நின் கழல் 

மண் உ(ள்)ளே மறைந்த லோகம் மன்னும் மன்னன் ஆக்குமே 

பண் உ(ள்)ளே அடங்க வல்ல பண்பு உடைத்த பாதமே ?

பொருள்  :-

மண்ணுலகம் வாழும் உயிர்கட்கு முத்தி தருவனவும் , விண்ணவர்களுக்குத் தமது பிணக்குகளைத் தீர்ப்பனவும் ,  மாவலிக்கு மண்ணுள் உறையும் பாதாள உலகின் அரசும், சிரஞ்சீவித்தனமும் அளித்தனவும் இப்பாதங்களே,  அப்பேற்பட்டச் சிறப்புடைத்த பாதங்கள் பண் கொண்ட பாடல்களுக்குள் அடங்குமா என்ற வினா ? இல்லை அடங்காது என்பது கருத்து 

எனினும் நான்காவது  அடிக்குச் சற்றே வேறுபட்டுப் பொருள் கொள்ளலாம் , அப்பேற்பட்ட திருவிக்கிரமனின் கழல்கள் கூட  மெய்யடியார்களின் பாக்களுக்குள் அடங்கும் !

The feet that are capable of granting salvation to earthlings, solve the problems of celestials, grant the lordship of Patala Loka and immortality to King Mahabali, such peerless Tirivikramas feet will it fit in the boundaries of a musical song? Normally it will not, but we can also take it as, if sung by a true Bhakta even such great Trivikramas feet too will fit into the devotee's song!

உத்தமன் பேர்பாடி
(எழுசீர்ச் சந்த விருத்தம் -
தானனா தானான தானனா தானான
தானனா தனதான - தானதனா)

உத்தமன் பேர்பாடி ஒண்டமிழ்த் தார்சூட்ட
… உற்றநற் றுணையாகும் - ஓர்கழலாம் 
பத்திமைத் தேனூறு சிந்தையுள் ளோவாத 
… பற்றெனப் பதிகின்ற - சீர்கழலாம்    
எத்தவம் செய்தாலும் மட்டிலன் பாலன்றி
…  எட்டரும் பொருளாகும் - ஏர்கழலாம்
வித்தகத்(து) ஓர்மாணி ஒப்பரும் மாலாகி
… விண்ணுயர்ந் தெழிலோங்கு - வார்கழலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...