செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஐந்து மொன்றி கலி விருத்தம்

ஐந்துமொன்றி யாடவத்த ரைந்தெழுத்தை யுள்ளியே
யைந்துமொன்று மாங்கிருத்தி மங்கைபங்கர் தம்முகத்
தைந்துமொன்று மாழ்ந்தகாட்சி யைத்தியான மின்றிநா
மைந்தமொன்று மானநாத னின்றனெங்கு மாழவே

#கலிவிருத்தம்

சீர் பிரித்து

ஐந்தும் ஒன்றி ஆழ் தவத்தர் ஐந்து எழுத்தை உள்ளியே
ஐந்தும் ஒன்றும் ஆங்கு இருத்தி மங்கை பங்கர் தம் முகத்து
ஐந்தும் ஒன்றும் ஆழ்ந்த காட்சியைத் தியானம் இன்றி நாம்
ஐந்தும் ஒன்றும் ஆன நாதன் நின்றன் எங்கும் ஆழவே

பொருள்

ஐம்புலங்களுமொரு முகப்படுத்தி ஆழ் தவம் செய்வோர் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தியானித்துத் தனது ஆறாவது அறிவான மனத்தையும் அங்கு இருத்தி மங்கை பங்கரான சிவ பெருமானின் ஆறாவது முகமான அதோ முகத்தின் காட்சி பெற்று ஆழ்ந்திருப்பர், தியானம் அறியாத நாம் அவ்வதோ முக்கத்தை எளிதாய்க் காண ஆறுமுகனான கந்த நாதன் எங்கெங்கும் புவியில் நின்றனன்! (என்னே அவன் கருணை!)

ஐந்து - ஐம்புலம்
ஐந்தும் ஒன்றும் - ஆறு - இரண்டாம் அடியில் மனத்தைக் குறிக்கிறது

People who are deep in penance control their 5 senses and make it unified and meditate on the 5 syllabled mantra (Om Nama Shivaya) and also keep their mind focused on that, by doing so they get the darshan of the sixth face of Shiva (called Atho Mukha) which is a rare sight afforded only to those great renunciants, but for us ( who don't have capability of penance) to get a glimpse of that sixth face, he came down everywhere to this earth! -- the five faced Shiva came down in extreme love for us as 6 faced Karthikeya!

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...