புதன், 30 அக்டோபர், 2024

ஆற்றை பஃறொடைவெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 

ஆற்றைச் சடைக்கரந்த வைம்முக னாறாக
வாற்றின்க ணெற்றி யனற்பொறியை யாற்றினா
னேற்றமிகு வாறுரு வின்முறுவற் பாலகராய்த்
தோற்றமுற நாற்றவறு தூமலர்க்க ணூற்றமிகு
வாறனையர் பாலூட்டு மன்பால் வளர்ந்தாரி
னாறுதலை யொன்றணைத்தா ளன்னையுமை மாறுதலா
யோருடல மாறுதலை யுற்ற திருமுருகன்
காருருவத் தானவரை வேரறுக்கப் பாருதித்துப்
போர்புரியச் சத்திதரும் பொன்வேலைப் பெற்றுவந்
தார்ப்பரிக்கு மார்கடலில் வற்றிடவே நேரெறிந்து
சீர்பெருக ஞாலமெங்குஞ் செய்த சிறுவனைச்
சீர்பெருகச் செவ்வாயிற் செப்பு
 
 
ஆற்றைச் சடை கரந்த ஐம் முகன் ஆறாக 
ஆற்றின் கண் நெற்றி அனல் பொறியை ஆற்றினான் 
ஏற்றமிகு ஆறுரு இன்முறுவல் பாலகராய்த் 
தோற்றம் உற நாற்ற அறு தூமலர்க் கண் ஊற்றமிகு 
ஆறு அ(ன்)னையர் பால் ஊட்டும் அன்பால் வளர்ந்தாரின்
ஆறுதலை ஒன்றணைத்தாள் அன்னை உமை மாறுதலாய் 
ஓர் உடலம் ஆறு தலை உற்ற திருமுருகன் 
கார் உருவத் தானவரை வேர் அறுக்கப் பார் உதித்துப்
போர் புரியச் சத்தி தரும் பொன் வேலைப் பெற்று உவந்து 
ஆர்ப்பரிக்கும் ஆர் கடலில் வற்றிடவே நேர் எறிந்து
சீர் பெருக ஞாலம் எங்கும் செய்த சிறுவனைச் 
சீர் பெருகச் செவ்வாயிற் செப்பு     
 
One with five faces and who hides river Ganges in his matted locks (Lord Shiva) in order to become six (faced) let the fire spark that emanated from his third eye into a river (Ganges). from this emanated six smiling forms in six fragrant flowers, these six babies were suckled by six esteemed maidens (Karthika), when Lord Uma Saw these 6 babies out of love she embraced and there emerged a different form which had six faces and one body! This (person) Lord Murugan came down to destroy the clan of Asuras by undertaking a war, for this he took the grace of his mom Uma, the shining Vel, and threw into the seas even making them dry! This was done to restore balance and wellness to this universe, to the child who did this , sing praises this Tuesday to restore all goodness and wellness! 
 
No photo description available. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...