விடியா விதியின் விதிமாற்றும் வேங்கடம் வெம்மைதரு
மிடியி னனலின் விதிமாற்றும் வேங்கடம் வேலையிடைப்
படியிற் பரமன் பதிகொண்ட வேங்கடம் பார்த்தருள
நொடியி லளியை நுடங்கு முயிர்க ணிலைபெறவே
விடியா விதியின் விதி மாற்றும் வேங்கடம் வெம்மை தரும்
மிடியின் அனலின் விதி மாற்றும் வேங்கடம் வேலை இடைப்
படியில் பரமன் பதி கொண்ட வேங்கடம் பார்த்தருள
நொடியில் அளியை நுடங்கும் உயிர்கள் நிலைபெறவே
பொருள் :-
விடியா விதியின் விதியையும் , வெம்மை தரும் மிடியின் அனல் என்னும் விதியையும் மாற்றக் கூடிய, பரமன் இவ்வாழி சூழ் உலகத்தில் பதி கொண்ட இடமுமான திருவேங்கடம், அங்கிரிக்கும் பரமனின் அருளால் தவிக்கும் உயிர்களின் விதியை நொடியில் மாற்றி அவைகளை நன்கு நிலை பெறவைக்கும் என்றவாறு
The place which changes the fate of Ill luck or bad fortune, that which changes the fortune of hot pangs of poverty and hunger, the place where the supreme lord resides in this earth, which is surrounded on all sides by seas, to shower his grace on the suffering souls and change their life in just a second and let them lead a stable life is the hill of Thiruvengada (Thirumala)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக