முத்தெடுக்க வேலையாழ்ந்து மூச்சடக்கி மூழ்கியே
முத்தடுக்கு நகையுடைத்த மங்கைபங்கர் மூர்த்திமேன்
முத்துடைத்த முத்தமிழ்க்கண் மோகமுற்று நித்தமும்
வித்தைகற்ற புலவனென்ன போற்றிசைக்க வேட்கையே
முத்தை எடுக்க கடலில் ஆழ்ந்து மூச்சடக்கி மூழ்கி முத்துப் போன்ற வரிசையாக அழகிய பற்களை உடைய (தேவானையின்) கணவனான முருகனின் மூர்த்தி மேல் முத்துப் போன்ற சிறப்பான முத்தமிழ் மீது ஆசை கொண்ட வித்தை கற்ற புலவரைப் போல தினமும் போற்றிசைக்க விருப்பம் எமக்கு
Like a diver who dives into the sea controlling his breath to get pearls, great learned poets dive into the vast depth of Tamil literature because of their love for the language, and praise their object of the poem. Similarly I too, want to praise the Lord of DevaSena who has beautiful rows of teeth everyday!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக