ஆறுதித்த நாதனாக வைஞ்சிரத்து நாதனும்
பாருதிக்க வந்ததென்னை போரொடக்கி வெல்லவே
நூறொழிக்க நீரொளிந்த நேயமற்ற சூரணி
நோயகற்ற ஞானமெட்ட நூன்மறந்த மாந்தருக்
கீறகத்து வாழ்வளிக்க வேதுவாக நின்றிட
வேரகத்து வெற்படைந்து தந்தைசாமி யென்றெழ
வேறதற்கு நேரிலாத சந்தநாதர் செந்தமிழ்
மேதினிக்கண் மன்னிநிற்க வீழ்விலாத போகமே
-எண்சீர் விருத்தம்
ஆறு உதித்த நாதனாக ஐம் சிரத்து நாதனும்
பார் உதிக்க வந்தது என்னை போர் ஒடுக்கி வெல்லவே
நூறு ஒழிக்க நீர் ஒளிந்த நேயம் அற்ற சூர் அணி
நோய் அகற்ற ஞானம் எட்ட நூல் மறந்த மாந்தருக்கு
ஈறகத்து வாழ்வளிக்க ஏதுவாக நின்றிட
ஏரகத்து வெற்பு அடைந்து தந்தை சாமி என்று எழ
வேறு அதற்கு நேரி இ(ல்)லாத சந்த நாதர் செந்தமிழ்
மேதினிக்கண் மன்னி நிற்க வீழ்வு இ(ல்)லாத போகமே
Why did the five faced Lord Shiva decide to become the Lord who appeared in the river (Gaangeyan - Murugan) ? To embark on a war and destroy the loveless Sooras army (Asuras) who hid in the sea, to remove diseases (physical/ mental) to let the wisdom dawn on people who have forgotten the study of scriptures, to guide them in attaining the final salvation , to show the Guru Sishya Bhava by appearing in Thiruveragam (as Swami Natha), to let the peerless metre of Chanda poet Arunagirinathar's work (Thiruppugazh) to remain in this earth forever as an unbeatable treasure
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக