யாம் ஆமா நீ ஆம் ஆம் மா யாழீ காமாகாண் நாகா காண் ஆகா மா காழ் ஈயா மாமாயா நீ மா மாயா !
இவ்வாறு பிரித்து திருஞான சம்பந்தரின் மாலைமாற்றுப் பாடற்கு ஒரு சாக்த பரமான விளக்கம் காணலாம்
யாம் ஆமா நீ? ஆம் ஆம் (கட்டாயம் ஆகும் கைவல்ய முக்தி அடையும் பொருட்டு) , மா ஆகிய மஹாலக்ஷ்மியும், யாழீ ஆகிய சரசுதியும், காமா காண் ஆகிய காமாட்சியும் நீ தான் , நாகா (குண்டலினி ஆற்றலாய் இருப்பவளே, (காண் ஆகா) காணத் தகாதவை , மா காழ் (பெருங்குற்றங்கள்) ஈயா (எமக்குத் தராது) மாமாயா ( மஹமாயா என்னும் தேவியே) நீ மா மாயா (எமது மாயையை - மாயையால் நாம் உழல்வதை அறுப்பாயாக)
Can we become you? Can Jiva become Param, yes, when Kevaladvaitam is attained (Aham Brahmasmi) You are Mahalakshmi, Saraswathi and Kamakshi, you are the sleeping serpent Kundalini in us, Oh Devi Mahamaya, remove our unwanted and unwarranted faults and cut asunder the veils of Maya!
வைஷ்ணவ பரமாக அதே பாட்டைப் பார்ப்போம்
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாய் ஆழீ காழ் நாகா
காண் ஆ கா மா காழ் ஈயா மாமாயா நீ மா மாயா
யாமும் நீயும் ஒன்று என்றால் அது பொருத்தமோ ? அல்லவே அல்ல நீ தான் பரம் நாம் உமது அடிமை தான் ! பகைவரை மாய்க்கும் ஆழி உடையவனே ஒளிபொருந்திய நாகம் (ஆதி சேஷனை) உடையவனே , அனைத்து உயிரினங்களக்கும் காப்பானவனே , பெருங்குற்றங்கள் எம்மை அடையாத வாறு உமது மாயையில் அகப்படும் வாழ்வை சரி செய்வாயாக மா மாயனே ( திருமாலே)
Can we become you, ( Can Jeevatma become Paramatma), no not at all, we can only be your service, oh holder of Chakra that destroys enemies, one who has the lustruous serpent Adi Sesha always with you, one who saves all Jeevas, remove all our faults oh Sriman Narayana ( Mamaya) and cut asunder the veil of your maya.
#அம்பாள் #பெருமாள் #காழிப்பிள்ளையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக