காம(ர்)மேனி கருகவைக்கக் கண்திறந்த நாதர்க்குங்
காமமேனி பெருகவைக்கக் கண்மலர்ந்த தேவியுன்
சேமமேனி யருகிருக்க நாமமேது வாழ்விலே
வாமமேனி யுருவெடுத்த வாலைகாஅ மாட்சியே
காமர் மேனி கருக வைக்கக் கண் திறந்த நாதர்க்கும்
காமம் மேனி பெருகவைக்கக் கண் மலர்ந்த தேவி உன்
சேம மேனி அருகு இருக்க நாமம் ஏது வாழ்விலே
வாம மேனி உரு எடுத்த வாலை கா மாட்சியே
காமனை எரிக்கக் கண்ணைத் திறந்த சிவ பெருமானுக்கும்
காமம் பெருகவைக்கும் அழகான கண்களை உடைய தேவியே
உனது சேமமான மேனி எமது அருகில் உள்ளவரை எமக்கு ஏது அச்சம் இந்த வாழ்விலே? அழகு பொருந்திய , இடப் பாகத்துருக் கொண்டவளே என்றும் இளமை குன்றா காமாட்சி தாயே
நாமம்- அச்சம்
காஅமாட்சி - இசையளபெடை
காமாட்சி - காமாக்ஷியையும் குறிக்கும், அதவாது ஒப்பற்ற அழகு பொருந்திய கண்களை உடையவள் என்றும், அதே நேரத்தில் எமது மாட்சியைக் காக்கும் தெய்வம் என்றும் பொருள் படும் ( She who has unparalleled beauty in her eyes, and she who protects our fame)
Even for the Lord who burnt Kama to ashes (Lord Siva) the beauty of your eyes makes him brimming with love for you! Oh auspicious formed one when you are near us, what do we have to fear in life? The beautiful and left occupying form (of Lord Siva) ever youthful Goddess Kamakshi (of Kanchi)
#அம்பாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக