கோதைபாணர் விட்டுசித்தர் மங்கைமன்னர் பொய்கையார்
வேதசாரந் தமிழுரைத்த மாறவிப்ர நாரணார்
பூதபேயர் பத்திசாரர் சேரமன்ன ரமுதனார்
தாதுரைக்குங் கவிஞரோடு மாமுனிச்சொஃ றஞ்சமே
சீர் பிரித்து
கோதை பாணர் விட்டுசித்தர் மங்கை மன்னர் பொய்கையார்
வேத சாரம் தமிழ் உரைத்த மாறர் விப்ரநாரணார்
பூதர் பேயர் பத்திசாரர் சேர மன்னன் அமுதனார்
தாது உரைக்கும் கவிஞரோடு மாமுனி சொல் தஞ்சமே
பொருள்
ஆண்டாள் , திருப்பாணாழ்வார் , திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார், வேத சாரத்தைத் தமிழ்ச் செய்த நம்மாழ்வார், விப்ர நாராயணர் என்னும் தொண்டரடிப்பொடியாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் பத்திசாரராகிய திருமழிசையாழ்வார் சேரமன்னராகிய குலசேகராழ்வார், திருவரங்கத்தமுதனார், தேன் போன்று உரைக்கும் மதுரகவியாழ்வார் மற்றும் மனவாள மாமுனிகள் சொல்லை யாம் தஞ்சம் எனக் கொள்வோம்
The Words of Andal, Thiruppaanaazhwar, Thirumangai aazhwaar, poigai aazhwaar, Nammazhwar who made Vedas into Tamil, Thondaradippodi aazhwaar, poothathaazhwaar, pEyaazhwaar, Bakthi Sarar or Thirumazhisaiyaazhvaar, Chera King or Kulasekaraazhvaar, Thiruvarangaththamudhanaar, honey like poet or Madhurakaviyaazhvaar and Manavala Mamuni's words are our refuge!
சிறு மாற்றத்துடன் நாலயிர திவ்யப் பிரபந்தத்தின் ஆசிரியர்களைக் குறிக்கும் வழியாக இப்பாடலை மாற்ற-
கோதைபாணர் விட்டுசித்தர் மங்கைமன்னர் பொய்கையார்
வேதசாரந் தமிழுரைத்த மாறவிப்ர நாரணார்
பூதபேயர் பத்திசாரர் சேரமன்ன ரமுதனார்
தாதுரைக்குங் கவிஞர்பாட னான்குபத்து நூறதே
நான்கு பத்து நூறு = 4*10* 100 = 4000
சீர் பிரித்து
கோதை பாணர் விட்டுசித்தர் மங்கை மன்னர் பொய்கையார்
வேத சாரம் தமிழ் உரைத்த மாறர் விப்ரநாரணார்
பூதர் பேயர் பத்திசாரர் சேர மன்னன் அமுதனார்
தாது உரைக்கும் கவிஞர் பாடல் நான்கு பத்து நூறு அதே
Andal,
Thiruppaanaazhwar, Thirumangai aazhwaar, poigai aazhwaar, Nammazhwar who
made Vedas into Tamil, Thondaradippodi aazhwaar, poothathaazhwaar,
pEyaazhwaar, Bakthi Sarar or Thirumazhisaiyaazhvaar, Chera King or
Kulasekaraazhvaar, Thiruvarangaththamudhanaar, honey like poet or
Madhurakaviyaazhvaar sung the four thousand prabandhams (on Vishnu)
#பெருமாள்
#ஆழ்வார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக