புதன், 12 பிப்ரவரி, 2025

அயன்மொழி விருத்தம்

அயன்மொழி வேண்டா வியன்மொழி வேண்டும் 

           பயன்மொழி வேண்டா நயன்மொழி வேண்டுஞ்
 

செயன்மொழி வேண்டா மயன்மொழி வேண்டு 

             மிகன்மொழி வேண்டா விசைமொழி வேண்டு
 

மயன்மொழி விண்டா வுடன்சிறை வைத்த 

              குயின்மொழி வேண்டு மையன்மொழி தான்டா
 

கயல்விழி பாண்டி கனிவள நாட்டி 

             னுயிர்மொழி யென்றே யுயர்ர்த்தியே கூறே 

 

சீர் பிரித்து 

 

அயல் மொழி வேண்டா இயல் மொழி வேண்டும்

பயன் மொழி வேண்டா நயன் மொழி வேண்டும் 

செயல் மொழி வேண்டா மயல் மொழி வேண்டும்

இகல் மொழி வேண்டா இசை மொழி வேண்டும்

அயன் மொழி விண்டா உடன் சிறை வைத்த

குயில் மொழி வேண்டும் ஐயன் மொழி தான் (அ)டா

கயல் விழி பாண்டி க(ன்)னி வள நாட்டின்

உயிர் மொழி என்றே உயர்த்தியே கூறே

 

We do not want foreign language, but we want natural language

We do not want a language for the sake of communication alone, we want language for the sake of its beauty

We do not want language for completing tasks, but we want a language that we can feel enamoured with

We do not want the language of our conquerors, but we want the language of music

 When Brahma could not reply properly he was imprisoned by the Lord of sweet voiced Valli (Murugan) and it is his language that is the lifeline of the land where  Meenakshi reigned in ever youthful country of Madurai  in the Pandya kingdom

Thus we should proclaim! 

மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam  1 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்நம் செந்தில் மேய வள்ளி மணாளன் - Kungumam Tamil Weekly Magazine



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்