அயன்மொழி நன்கறிந் தன்னைமொழி கல்லா வியன்மொழி கேட்டால் விரைந்து - குயின்மொழி வள்ளியமை நாதன் மயிலேறி வந்திங்குத் தள்ளியெமை வைப்பான் றனித்து
சீர் பிரித்து
அயல் மொழி நன்கு அறிந்து அன்னை மொழி கல்லா
வியன் மொழி கேட்டால் விரைந்து குயில் மொழி
வள்ளி அ(ம்)மை நாதன் மயில் ஏறி வந்து இங்கு
தள்ளி எ(ம்)மை வைப்பான் தனித்து
அயன் மொழியான (ஆங்கிலத்தை) நன்கு அறிந்து தாய்மொழி ஆன தமிழை கல்லாதுள்ளோம் என்ற வியன் நடப்பை கேட்டால், குயில் போன்ற மொழியை உடைய வள்ளி அம்மையின் நாதனான முருகப் பெருமான் தனது மயிலின் மீதேறி விரைந்து இங்கு வந்து நம்மை தனித்துத் தள்ளி வைப்பான்!
Learning a foreign language(like the Queen's English) well, and not one's mother tongue (which happens here!) if the Lord of the sweet cuckoo voiced VaLLi's learns of this queer occurence, he will come quickly on his mount, the peacock and cast us away !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக