புதன், 12 பிப்ரவரி, 2025

இரவும் கட்டளைக்கலித்துறை

இரவும் பகலு நிலவுங் கதிரு மெனவிரண்டு
பரவு மொழியும் புழங்கி யுளதே பலசமயங்
கரவுங் கபடுங் கயவ ருரையாற் கதைவளர்ந்த
புரையை விடுவோம் வடதென் மொழியும் பழபிணைப்பே

 

 

சீர் பிரித்து 

 

இரவும் பகலும் நிலவும் கதிரும் என இரண்டு

பரவும் மொழியும் புழங்கி உளதே பல சமயம்

கரவும் கபடும் கயவர் உரையால் கதை வளர்ந்த

புரையை விடுவோம் வட தென் மொழியும் பழ பிணைப்பே 

 

Like day and night, sun and moon, the two languages devoted to singing the praises of God, have been in vogue for a long time, let us drop the recent stories peddled by deceitful people who tell otherwise as Tamil and Sanskrit have always been inexplicably intertwined from yore!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்