கூகாக்கைக் காகாக்கை கோகாக்கைக் காகாக்கை
கூகைக்கை காகாக்கைக் காகாக்கோக் - கீகாகைக்
கூக்கை குகக்கோகைக் கீகை கககக்கோ
காக்கைக்கூ கோக்கோக் ககா
சீர் பிரித்து
கூ காக்கைக்கு ஆகு ஆக்கை கோ காக்கைக்கு ஆகு ஆக்கை
கூகைக்கு ஐ கா காக்கைக்கு ஆகாக் கோக்கு ஈ கா கைக்கு
ஊக்கை குகக் கோ கைக்கு ஈ கை க ககக் கோ
காக்கை கூ கோக் கோக்கு அகா
பொருள்
பூமியைக் காப்பதற்கு ஒரு ஆக்கை எடுத்தவருமான வராகர் , பசுக்களை காக்க ஆக்கை எடுத்த கண்ணனும் , கூகைக்கு அழகு தருபவளும் அதற்குக் கடவுளாக விளங்குபவளுமான இலக்குமி சீதையாக அவதாரம் எடுத்தபோது காத்த காக்கை ஆகிய காகாசுரனுக்கு ஆகாத கோவான இராமருக்கு ஈதலும் காத்தலும் தரும் இரு கரங்களுக்கும் (வரத, அபய ஹஸ்தங்கள்) ஊக்கையாக விளங்குபவள் , குகனுக்கு கையில் (வேலை) ஈந்தவள், க ஆகிய பிரமனும், ககக் கோனான அதாவது ஆகயத்தின் அரசனான் இந்திரனும் தம்மைக் காக்கைக்குக் கூக்குரல் எழுப்பி அழைக்கப் படுபவளுமான அரசர்கே அரசரான மகா தேவரின் அகத்தில் உரைபவளான ஆதி பரா சக்தியேயாம்
For Varaha who took an avatar to save the earth, and Krishna who took an avatar to save cows/ Jivas, Owl mounting Goddess Lakshmi when she took an avatar as Seetha the crow whom she saved, Kakasura's enemy , Sri Rama's two hands of giving and saving, for this she who is the potential force behind it, she who has the hands that handed over the VEl to Karthikeya and she whom Brahma and Indira call for saving themselves when the need arises is none other than the Goddess Parashakti who occupies (half ) the body of Mahadeva or the King of Kings!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக