வியாழன், 13 பிப்ரவரி, 2025

கூ மடியமர் கலி விருத்தம்

கூமடியமர் தீயவுணனின் றூசிறுவனு மழைக்கக்
கோமடியதன் கூர்நகமெடு சேகுருதியி னனைத்த
மாமடியமர் மாதுணையிர வாழ்வினிலிடர் வருமோ
சாமடியம ராவிடிவுறச் சார்விவளடி பிடியே 



கூ மடி அமர் தீ அவுணனின் தூ சிறுவனும் அழைக்கக்

கோ மடிய தன் கூர் நகமெடு சே குருதியில் நனைத்த

மா மடி அமர் மா துணை இர வாழ்வினில் இடர் வருமோ

சா மடி அமர் ஆ விடிவு உறச் சார்வு இவள் அடி பிடியே 

 

கூ- உலகம் கோ- அரசன் மா- சிம்மம், இலக்குமி

 

இவ்வுலகை ஆண்டு வந்த தீய அவுணனான இரணியன்றன் தூய சிறுவனான ப்ரஹ்லாதன் அழைக்க உடன் வந்து அரசனைச் தன் கூர் நகங்களால் குருதி படியும் படிக் கொன்ற சிம்மத்தின் (நரசிம்மரின்) மடி யமர்ந்த மஹாலக்‌ஷ்மி துணை இருக்க நமது வாழ்வினில் ஏதும் இடர் வருமோ? சாவின் மடியில் அமர்ந்து தவிக்கும் உயிர்கட்கு விடிவு தருவது இவளது திருவடி என்று உணர்ந்து அதனைச் சார்வாய்ப் பற்றுவோம் !

When the pure son of the evil Asura Hiranya Kashibu who was ruling this world called, the lord in the form of a lion immediately arrived and killed the Asura and got his sharp nails drenched with blood. Mahalakshmi who is seated on the Lord's lap is showering her grace on us, so there can be no problems for us whatsoever, we realise that for the Jivas who are battling the cycle of life and death she is the saviour and we tightly clutch her holy feet!

 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்