ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

முருகா கலி விருத்தம்

முருகா குமரா குகனென் றழைவார்க்
கிருதா ளலர்சே ரிசைவைத் தருமே
பருகா துனையே பழுதைம் புலனே
னுருகா துணர்வாழ்ந் துளதே னுளமே

 

 சீர் பிரித்து

 

முருகா குமரா குகன் என்று அழைவார்க்கு 

இரு தாள் அலர் சேர் இசைவைத் தருமே 

பருகாது உனையே பழுது  ஐம் புலன் ஏன்

உருகாது உணர்வு ஆழ்ந்து உ(ள்)ளது ஏன் உ(ள்)ளமே ? 


முருகா குமரா குகன் என்ற மந்திர நாமங்களால் அழைக்க அது முருகனின் தாமரைத் திருவடிகளைச் சேரும் இசைவையே தரும் போது , எனது பழுதான ஐம்புலன்கள் ஏன் உன்னைப் பருக மறுக்கின்றது? அதே போன்று எனது உள்ளமும் உன்னையே உணர்வில் ஆழ்ந்து உருகாமல் ஏன் இருக்கின்றது ?

 

For those who chant the names Muruga Kumara and Guha, they are powerful enough to grant us the lotus feet of the Lord, yet my faulty five senses and mind dont immerse in love at the thought of you oh Lord, why is this? 

 

இப்பாடல் கந்தரநுபூதியை யொத்த சந்தத்தி லமையபெற்றது

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்