கம்பற் கிளையாளைக் கம்பற் கினியாளைக்
கம்பத் திளையாற்குக் கைவேலை யீந்தாளை
யும்பர்க்கு மேலான யூழிக்கு மூலாளைக்
கும்பிட் டுயர்வாரைக் கும்பிட்டே யுய்வோமே
கம்பன்(கு) இளையாளைக் கம்பன்(கு) இனியாளைக்
கம்பத்து இளையான்(கு) கை வேலை ஈந்தாளை
உம்பர்க்கும் மேலான ஊழிக்கு மூலாளைக்
கும்பிட்டு உயர்வாரைக் கும்பிட்டே உய்வோமே
கம்பத்திலிருந்து உதித்த நரசிம்மர்க்கு இளையவளானவளும், ஏகம்பருக்கு இனியவளுமான , கம்பத்திளையனாரான முருகனுக்குக் கையில் வேலை ஈந்தவளுமான, விண்ணோர்க்கு மேலவளான, ஊழிக்கு மூலவளுமான காமாக்ஷியைக் கும்பிட்டு உயர்வை அடையும் அவளது அடியார்களைக் கும்பிட்டே நாம் உய்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக