மருளகத் தலைந்த சிறியேனை
மதிசமைத் துயர்ந்த வுனதாளைப்
பொருளெனத் துணிந்து புகழ்பாட
வொருதமிழ்த் திறத்தை யருளாயே
திருமணத் தணைந்த விருமாத
ரிருபுறத் தணைந்த வொருகோலப்
பொருசெயித் துவந்த புகழ்வேலா
பெவரெவிக் கமர்ந்த பெருமாளே
மருள் அகத்து அலைந்த சிறியேனை
மதி சமைத்து உயர்ந்த உன தாளை
பொருள் எனத் துணிந்து புகழ் பாட
ஒரு தமிழ் திறத்தை அருளாயே
திருமணத்து அணைந்த இரு மாதர்
இரு புறத்து அணைந்த ஒரு கோல
பொரு செயித்து உவந்த புகழ் வேலா
பெவரெவுக்கு அமர்ந்த பெருமாளே
திருமணத்தால் அணைத்ந்த இரு தேவிகளான வள்ளியும் தேவயானையும் இரு புறம் சூழ நின்ற ஒப்பற்ற கோலம் கொண்ட, போர் என்றால் உவந்துவெற்றியை நாட்டும் வேலை உடைய புகழுக்குரியவனே, பெவரெவிக்கு (Beverwijk) என்னும் தலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் பெருமாளே
மருளால் சூழ்ந்த அகத்தை உடைய சிறியேனை மதியை நன்றாக பக்குவப் படுத்தி, உனது உயர்ந்த தாளையே பொருள் என உணரச்செய்து அதன் புகழைப் பாட ஒப்பற்ற தமிழ்த் திறத்தை அருள்வாயாக
Oh Lord who gives us a darshan in beautiful form flanked by two Devis whom you married Valli and Devasena, and the one who holds the vEl which enjoys and fights and brings victory, the one who stays in Beverwijk, please grant this little one who lacks wisdom by making him understand that your holy feet are the true salve and make him write verses of praise by giving him the knowledge of incomparable language of Tamizh.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக