செவ்வாய், 31 மார்ச், 2026

எவ்வாய் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 எவ்வா யணுகினுஞ் செவ்வேளைச் சேரலா

மெவ்வா யுரைப்பினு மேற்றருள்வான் மந்திரமா
யொவ்வா முறையில்லை யோத லொழியாதே
வெவ்வினைக்கு வேலை யிலை

செல்வழியா சிகரமா - நேரிசை ஆசிரியப்பா

வியர்வை சிந்தி மெய்தீர வருத்தி 

யுயர்திகழ் சிகரத் தடைத லொன்றே 

யிலக்கெனக் கருதி யிழந்தனம் பலநா

ளலர்மலர் பூத்த தாங்கு காணிலை 

மலைவழி யருவி மஞ்சன மாடிலை 

யிறைதரு மியல்பினை யிழந்தனை நெஞ்சே 

பாரிடை வாழ்வும் பாழோ  

சேர்விடம் விடுத்துச் செல்வழி காணே 


வெள்ளி, 27 மார்ச், 2026

வியாழன், 26 மார்ச், 2026

குறள் வெண்செந்துறை


சென்றதை விட்டுச் சிந்தையில் வருவதை

நன்றெதிர் கொள்வார் வென்றிருப் பாரே 


கால மறிந்து களத்தி னிறங்க 

ஞால நல்கு நமக்குத் துணையே 


அமையும் பொழுதை யணைத்துச் செல்ல 

விமயஞ் செல்வ தெளிதென் றறியே 



புதன், 25 மார்ச், 2026

உமையொரு பாகன் ஈறுமுதலித் தொடை வெண்பா

 உமையொரு பாகன் உகந்தருண் மைந்தா 

சுமையிரு தோளுஞ் சுமந்து -னமைவிட

நோக்கி யலையலையா நோற்று வருவார்தம்

வாக்கிற் கிசைவாய் மகிழ்ந்து 

ஞாயிறு, 22 மார்ச், 2026

நடைப்பயணம் ஈறுமுதலித் தொடை வெண்பாக்கள்

நடைப்பயண மேற்கொள்ள நல்லபயன் கிட்டு

மிடைக்கொழுப்பு நீங்கு மிதமா - யடைப்பின்றிச்

செங்குருதி யோடு மிதயஞ் சிறந்தியங்கு

மங்கா தொளிரு மதி 


வெள்ளி, 20 மார்ச், 2026

இயல்பிழந்தால் வெண்பா

இயல்பிழந்தா லில்லை யெவருக்கும் வாழ்வு 

கயல்பழிக்குங் கண்ணா ரெழிலீ - செயல்பல

செய்துசீர் வாழ்ந்த சமூகஞ் செயற்கையென்னும்

பொய்துதிக்கப் போய்மாண்ட வாறு 

வியாழன், 19 மார்ச், 2026

நிழல்கனி வெண்பா

நிழல்கனி வேர்தந்து நெடுங்கிளைவீ  டாக்கி

யழல்கொண்டு மட்டமு தாக்கு - மெழில்மிகு

நற்றமிழ் நாட நலஞ்சேர் மரமென்ன

மற்றவர்க்காய் வாழ்வதுவே வாழ்வு

சாற்றமுது வெண்பா

சாற்றமுதுஞ் சோறுங் கறியமுதுஞ் சார்ந்திருப்பார்

மாற்றமுதைக் கொள்வரோ வாய்ப்பிருந்து - மேற்றமிகு

தாய்மொழியின் மேன்மைநிலை தாந்தெளிய வேற்றவரின்

வாய்மொழிசொல் சார்வதுமென் மாண்பு

புதன், 18 மார்ச், 2026

வீடுபெற வெண்பா

 வீடுபெற வேண்டினும் வாழ்வை விழையினுந்

தேடியருள் வள்ளிமலைச் சீருரைப்போம் - வேடர்

மடந்தை யுவந்து மணந்த கடம்ப

னடந்த சிலம்பை நயந்து 

செவ்வாய், 17 மார்ச், 2026

ஆலாலம் வெண்பா

 ஆலால முண்டா னலுதித் தடைந்தாறு

வேலாலே வென்றான் விதிசிறைத்தான் - பாலாழி
பாம்பணையான் கண்டோன்று பாவை மணமுடித்தான்
சாம்பிணியைப் போக்குமவன் றாள்

சனி, 14 மார்ச், 2026

அரியருளை நாடி வெண்பா


அரியருளை நாடி  யழுத குருகூர்க்

குருவருளை நாடிக் குறையி னொருகூறு

மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை 

விண்டா ருளம்வாழும் விண் 

குருபத்தி வெண்பா

குருபத்தி கொண்டாள் கொடுத்த கனியை

யரிபற்றி யன்றுவந் துண்டான் - குருபத்திக் 

கேற்றமரி பத்தியின்மே லென்று தெளிவுறச்

சாற்றச் சவரியே சான்று 


வெள்ளி, 13 மார்ச், 2026

கனியுண்டு வெண்பா

கனியுண்டு தந்தாள் கனிவான பத்திக் 

கினிதுண் டிசைந்தா னிறைவன் - மனதண்டா

தாணவத்தை யாடவத்தி னாறகற்று தூயருக்கு 

மாணளிக்க நாவிசைக்கும்  வான்  


உறக்கத்தும் வெண்பா

உறக்கத்து முன்பே ருரைக்கின்றாள் பேதை 

மறக்க வழியின்றி மாலி - லுறங்குதியோ 

பாலாழி பாம்பணையு மாலேயுன் பித்தையிவ

ணூலாக நொந்துழலல் கண்டு 


வியாழன், 12 மார்ச், 2026

காலாட்படையாகும் கட்டளைக் கலித்துறை

 காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய 

மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்

தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல் 

வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே


வாழ்வை நேரிசை பஃறொடை வெண்பா

 வாழ்வைத் தொலைத்து வளரப் பொருளீட்ட

றாழ்வைத் தரவிருக்கச் சார்வேனோ வூழ்வினையா

னிற்கும் பொருளதுவே நிற்குமெனுஞ் சான்றோர்சொல்

கற்கும்  வழக்குக் கரந்ததுவோ பொற்குவியல்

வீணா மொருநா ளதனான் மெலிந்துவரும்

வாணாண் முடியுமுனே மைவளருங் காணாக 

கண்டத்தர் காறொழலே நன்று


சூரன்வீழ சந்த விருத்தம்

 சூரன்வீழ வேலெறிந்த தோகைநாதன் வீரமோ

மாரன்வீழ வடிவுடைத்த மாலுணர்த்து கோலமோ

பாரின்வீழ்ந்த வுயிர்களுய்யப் பற்றறுக்குங் கருணையோ

வோரின்வாழ்வி லோங்குமத்த மூப்பிலாத மூலனே 


புதன், 11 மார்ச், 2026

சூரனை வெண்பா

 சூரனை வீழ்த்திச் சுரருலுக மீடரப்

போரினிற் புன்னகைத்த வென்றியான் - மாரனை

வீழ்த்தும் வடிவுடைய வேலன் மயலதனி

லாழ்த்த வணங்கிவளை யாள்  


செவ்வாய், 10 மார்ச், 2026

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் 

மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே 

செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் 

சொந்தமென் றான துணிவுளதே வந்தகன 

வாட்கில்லை யாவதிங் கொன்று 


திங்கள், 9 மார்ச், 2026

வீரா வெண்பா

 வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா 

சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில் 

குணபரதக் கண்டா குணவாள் குமாரா 

கணேசற் கிளையென்றே கூறு  


ஓதம் வெண்பா (கரப்பு)

 ம் பணிதுயில்வா னும்பர்மோயாது

சூதாண்டு நாட்டுவான் றூமலரா ணாதன்

கரிதுரைச் சக்கரத்துக் காத்தருளு நீணா

வரவுர்கூக் கையே சரண்

வாலைசேலை சந்த விருத்தம்

 வாலைசேலை நீலமூட ஞாலமாளு நாதனின்

மாலையாளும் விழிமறைந்து வேலைவண்ண னெண்ணமே

கோலமாளு நீலவானின் மேனியென்ன நின்றதோ

மாலையாளு நிறைமதிக்கும் வாலைவண்ண மல்லவே

நதியாடி நேரிசை பஃறொடை வெண்பா

நதியாடி வெங்கதிரோன் றோன்றுதிசை நாடித்

துதிபாடி நாளைத் தொடங்க விதியாளு

மாற்ற லுடற்கமையு மான்ற மதியமையு

நாற்றிசையும் போற்று நடையமையு மேற்ற

மிறங்கா தினிதமையும் வாழ்வு

கான்சென்று பஃறொடை வெண்பா

கான்சென்று கேளிக்கை காண வமர்ந்தூர்தி

வான்சென்று முட்டு மரத்திடை மான்சென்

றடையும் வழித்தடத் தாய்ந்து பதுங்கி

யுடைய சமையம்பார்த் தோங்கி விடையறியா 

வீழ விரைபாயும் வேங்கை பலகூட்டம்

வாழ்வ தறிந்தும் மடமையாற் கீழிறங்கிக்

காணொளி செய்து கடைநாளை யீர்ப்பார்க

ளாணவத்தான் மைந்தனை யச்சுறுத்தி வாணாளைத்

தூண்பிளந்த சிங்கத் திரையாச் சுடரொழிந்த

மாண்பிலா மூடன் வகை


வெள்ளி, 6 மார்ச், 2026

இளவேனில் பஃறொடை வெண்பா

குயிலினங்கள் கோது கலமாகக் கூவு

மயினடிக்குங் காட்டின் மலர்மலரு மீளு

மயலிடம் பேர்ந்த வணிபறவைக் கூட்ட 

மயன்மிக்க பல்லுயிர்கள் வாஞ்சையுடன் சேரு 

மியற்கையெழி லோங்கு மிணையில்லாக் காலம்

வியனிள வேனிலே வா

வியாழன், 5 மார்ச், 2026

புதன், 4 மார்ச், 2026

செவ்வேடன் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச்

செவ்வேடன் செவ்வாயாற் சீரருளச் - செவ்வேடாம்

வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும்

வாயலரும் வாயலரா மைக்கு 

செவ்வாய், 3 மார்ச், 2026

அரவு அணைக்கும் பஃறொடை வெண்பா

அரவணைக்கும் வான்மதிக் கௌடதத்தைத் தேர்ந்து 

தரவிழைவா ரிந்நாள் சரீரந் துலக்கி 

யொருமனத்து மந்திர முச்சரித்து மீண்டு

மிரவனைத்தி னாண்மை யிகல்வென் றடைய

வரவணைத்துக் காப்பா ரரண் 


திங்கள், 2 மார்ச், 2026

மறைமதி பஃறொடை வெண்பா

மறைமதி யான மணவாழ்வை நொந்து 

பிறைமதியா மாற்றப் பிரானிடம் வேண்ட

நிறைமதியா மாற்றி நிமலன்றர வந்த 

விறைவனையே யெட்டுணையு மெண்ணா துழன்று 

சிறைவாழ்விற் சிக்கிச் சிதைந்துநிற் போர்க்கு

நிறைதேன் மலர்மேன்மோ கிக்கு ஞிமிறு

முறைமறந்து தல்லாடி மூடிதழின் மூழ்கி

மறைந்துபோம் வான்மீனோ வாழ்வு 


ஞாயிறு, 1 மார்ச், 2026

வாசம் மிகு சிந்தியல் வெண்பா

வாசமிகு மல்லிகையை மாதுமுடி சூட்டுமதித் 

தேசமிகு தேவி சிவையொளிர வீசற்கு

மேமதரு மாலைப் பொழுது 

மயக்குயர் சிந்தியல் வெண்பா

 மயக்குயர் விக்கும் வனப்புணர் விக்குந்

தயக்ககற்றிச் சேர்க்குஞ் சனத்தை நயத்தலுக்கே

ஞாலநல்கு மாலைப் பொழுது

மாலைப் பொழுது சிந்தியல் வெண்பா

தினத்திற் பணியாழச் சிந்தனை செல்லு

மனைத்து மடங்கு மிராவு வனப்புயர்

மாலையே வையத் துகப்பு


சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...