மாயவேட முனிவனாயி லங்கைமன்னன் சூழ்ச்சியால் தூயளென்னை விட்டுதூர தேசமேகு துயரதில் சாயவேந்தன் போர்தொடுக்க சார்ங்கனுக்கு விடயமில் நேயளுக்கு வயதுமாற நேரமோடு துயரதே
மாய வேட முனிவனாய் இலங்கை மன்னன் சூழ்ச்சியால் தூயள் என்னை விட்டு தூர தேசம் ஏகு துயர் அது இல் சாய வேந்தன் போர் தொடுக்க சார்ங்கனுக்கு விடயம் இல் நேயளுக்கு வயது மாற நேரம் ஓடு துயர் அதே!
முனிவனாக மாயவேடமிட்டு இலங்கை மன்னனான இராவணன் தூயளான சீதையை க் கவர்ந்து சென்றான் தூர தேசத்திற்கு என்பது எனக்குத் துயர் தரும் செய்தியன்று, அவனை வீழப் போர் செய்வதென்பது சார்ங்னான எனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை, என்றாலும் எனது நேயளான சீதைக்கு வயதாகிக் கொண்டு போகும் படி நேரம் ஓடுகின்றதே என்பதே எனது துயருக்கான காரணம்!
नमेदुह्खम्प्रियादूरेनमेदुह्खम्हृताइतिच .
तद्एवअनुशोचामिवयोअस्याहिअतिवर्तते+
என்ற வான்மீகி இராமாயணத்தின் தாக்கமாக இராமர் இலக்குமணற்கு உரைக்கும் கூற்றாய் அமைந்தது
இவ்வலைப்பூவின் கருத்தை ஒற்றி அமைத்த விருத்தம்
https://dagalti.blogspot.com/2011/11/blog-post.html?m=1
I worry not that my beloved is afar
I worry not that she was taken away
I worry from now till I win the war
She will be aging each passing day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக