செவ்வாய், 16 டிசம்பர், 2025

செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்

 மூன்று பத்து மூன்று கோடி தேவர் மூவர் மாந்தரும்

ஞான்று தொட்ட ஞானம் வேண்டி நாளு மேத்தும் நின்கழல்
சான்று செப்ப நிகரி லாத செம்மை பெற்ற மேன்மையை
மூன்று பத்து மூன்று மோசை மொழியு ரைத்த லாகுமே

மூன்று பத்தும் மூன்று(ம்) கோடி தேவர் மூவர் மாந்தரும்
ஞான்று தொட்ட ஞானம் வேண்டி நாளும் ஏத்தும் நின் கழல்
சான்று செப்ப நிகர் இ(ல்)லாத செம்மை பெற்ற மேன்மையை
மூன்று பத்தும் மூன்றும் ஓசை மொழி உரைத்தல் ஆகுமே?

முப்பத்து முக்கோடி தேவரும் மூவரும் மாந்தரும் பழமையான ஞானம் வேண்டி என்றென்றும் ஏத்துவது நின் கழலே அதற்கு உவமை கூறுவதற்கு வேறேதும் இணையில்லை என்றபடி செம்மை பெற்ற உனது கழலின் மேன்மையை, முப்பத்தி மூன்று ஓசைகளால் சமைக்கப் பட்ட மொழியான தமிழால் உரைத்து விட முடியுமா என்ன?

Thirty three crore Devas, Trimurtis and humans in order to attain the timeless wisdom always keep singing the praises of your holy feet, those feet have no metaphor to compare with, such are the greatness of your feet, will it be possible to express their greatness even by the peerless Tamil language which is formed by thirty three sounds!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி