வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாலைமாற்று

வேழவா தாசிவா வாசிதா வாழவே காழிவா சேனையா யானைசே வாழிகா நாழிகா வாதவா வாதவா காழிநா தாழவே வேதமோ மோதவே வேழதா 

 கலிவிருத்தம் 

 

 வேழ வாதா சிவா ஆசி தா வாழவே காழி வாசு ஏன் ஐயா யானை சே ஆழி கா நாழிகா வாதவா ஆதவா காழிநா தாழவே வேதம் ஓம் ஓதவே வேழ தா

 

யானையோடு போர் செய்தவனே சிவா ( பின்பு வென்று உரியாக தரித்தவனே ) ஆசி தா வாழவே சீர்காழியின் கடவுளே ஏன் ஐயா ( வியன்குறிப்பு) ஆனையைத் தன் ஆழிகொண்ட காத்த திருமால் உனக்கு வாகனமாக ( ஏறாக) வந்தானே

 

நாழியை காக்கும் வாதவா ( கால பைரவனே ) ஆதவா ( பசுக்களின் பதியே) எமக்கு காழிநாவும் ( உறுதியான சொல்லும் ) தாழவே வேதம் ஓம் ஓதவும் ( சிரம்பணிந்து வேதமும் அதற்கு முற்பட்ட ஓம்காரம் ஓதவும் ) தருவாயாக வேழ ( கரும்பைப் போல இனிப்பாய் இருப்பவனே )

 

படம்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி