வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாலைமாற்று

 மாவா தைவர்கா வாழியா விகலறு தேவா வாதே றுலகவி யாழி வாகார் வதைவாமா

குறள்வெண்செந்துறை 

 

 

மாவாது ஐவர் கா ஆழியா இகல் அறு தேவா வாது ஏறு உலகு அவி ஆழி வாகார் வதை வாமா

 

மாவாது - மஹாபாரதம்: ஐவர் - பாண்டவர் அவர்களைக் காத்த ஆழியானே ( சக்கராயுதம் கொண்ட கண்ணா) இகலறு தேவா ( பகையை அழிக்கும் தேவனே )வாது ஏறு ( சண்டை சச்சரவு மிகுந்த) இவ்வுலகை அவி ( நீ அழித்தால் என்ன) ஆழி வாகார் ( அறம் ஒழுகாதோரை) வதை ( கொல்வாய்) வாமா ( அழகா)

படம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...