சனி, 3 பிப்ரவரி, 2024

வேலவன் வெண்பா

இலங்கும் விலங்குந் துலங்கா விலங்கும்
விலங்கே கலங்கா விளங்கு   -நலமே
விளைய கரவா திடுவா யுமையா
ளிளைய குமர னினைந்து 



இலங்கும் விலங்கு - புண்ணியம் ( தங்கச் சங்கிலி)
துலங்கா விலங்கு - பாவம் ( இரும்புச் சங்கிலி)

கர்மாவில் நல்லது , தீயது என்ற இரண்டுமே விலங்கு தான் , ஒன்று தங்க விலங்கு மற்றொன்று இரும்பு விலங்கு. அதனால் நாம் இதைச் செய்கிறோம் என்ற ஆணவக் கருத்தை ஒழித்து நம்மிடம் இருப்பதை மறைக்காமல் நாம் இறைக்கருவி என்று விளங்கிக் கொண்டு , அனைத்தும் முருகனுடையது என்றறிந்து ஈவது நன்று 

படம்

கந்தரநுபூதியின் கருத்தைத் தழுவிய பாடல் 


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி