வியாழன், 1 பிப்ரவரி, 2024

பூ மன்னு மாது

பூமன்னு மாது புனைமாலை யேற்ற பெருந்தகையே பூமன்னு மாது புனைமாலை யேற்ற பெருந்தகையே பூமன்னு மாது புனைமாலை யேற்ற பெருந்தகையே பூமன்னு மாது புனைமாலை யேற்ற(ம்) பெறுந்தகையே

கட்டளைக்கலித்துறை 

படம் 

படம் 

பூவுலகில் என்றும் நிலைத்த புகழுடன் நிற்கும் மாது - ஆண்டாள், அணிந்த மாலை அன்புடன் ஏற்ற பெருந்தகையான, இப்புவியே பெண்ணாய் உருவெடுத்து ஆண்டாளாக வந்து புனைந்த பாமாலையை அன்புடன் ஏற்ற பெருந்தகையான ( பெருமாள்), என்றும் மலரில் நிலைத்தவளான இலக்குமியைத் தனது மார்பில் அணிந்த திருமாலை ஏற்றபெருந்தகைகளான (அடியார்கள்), பூ மன்னு ( இப்புவியில் நீடூழி வாழ்ந்து ) மாது புனை மாலை (அழகு மற்றும் அனைத்து செல்வங்களும் பெற்று ஏற்றமும் பெறுவர்) தகையே (சிறந்து)

பூ மன்னு மாது - அழகு பொருந்திய பெண் என்ற வகையில் சீதையையும் குறிக்கலாம் , பூ மன்னு மாது புனை மாலை ஏற்ற பெருந்தகை - சீதை மணமாலையை ஏற்ற இராமர் என்றும் கொள்ளலாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி