திங்கள், 15 ஏப்ரல், 2024

கல்யாண கருமாதி சிலேடை வெண்பா

விடுதலை மாயும் விதியெரிப் பாயும் சுடுதலை யேற்கு முடறா - னடுவிற் சரமாரித் தீவேள்வி சார்ந்துரைக் கேட்குங் கருமாதி கல்யாண மொன்று #வெண்பா

 

விடுதலை மாயும் விதி எரிப் பாயும்
சுடுதலை ஏற்கும் உடல் தான் நடுவில்
சரமாரி தீ வேள்வி சார்ந்து உரைக் கேட்கும்
கருமாதி கல்யாணம் ஒன்று  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி