செவ்வாய், 16 ஏப்ரல், 2024

செருப்பு விளக்குமாறு வெண்பா

செருப்புக்கு நாடா டிறனை யளிதன் விருப்புக் கிடமே விடாத - திருப்புக் கிளையாழ்வான் வாழ்ந்த விணையிலா வூரின் விளையாள்வான் மீள்விளக்கு மாறு 

செருப்புக்கு நாடு ஆள் திறனை அளி தன் விருப்புக்கு இடமே விடாத திருப்புக்கு இளையாழ்வான் வாழ்ந்த இணையிலா ஊரின் விளை ஆள்வான் மீள் விளக்கும் ஆறு

(இராமரின்) செருப்புக்கு நாட்டை ஆளும் திறனை அளித்த , தன்விருப்புக்கு இடமே தந்திடாத திருப்புக்கு ( மிக்க திருவருள் பெற்ற பாகவதனான ) இளையாழ்வான் ( பரதன்) வாழ்ந்த இணையிலா ஊரின் ( அயோத்தியின்) விளையாள்வான் ( அனைத்து விளைவுகளையும் ஆள்பவனான அரசன் - இராமன்) மீள்விளக்குமாறு 

மீண்டும் தன் மக்களுக்கு விளக்கும் வழிப்பாதையாக வந்துவிட்டான் (கோவிலின் வடிவில்) செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்க எழுதியது 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...