வியாழன், 25 ஏப்ரல், 2024

கந்தன் கலிவிருத்தம்

ஈன்றவென்னை யான்றசொல்லான் மூன்றுபோதுஞ் செப்பவே மூன்றுகண்ணர் கான்றெழுந்த சான்றுரைக்க வொப்பிலா மூன்றிரண்டு தோன்றுமங்கை ஈன்றபாலன் றப்பிலாத் தான்றடுத்து மூன்றுணர்த்தி நான்றமிழ்செ யேற்பனே #கலிவிருத்தம்

 

ஈன்றவென்னை யான்றசொல்லான் மூன்றுபோதுந் தப்பிலாச் செப்பவே தான்றடுத்து மூன்றுணர்த்தி - தனது மகனான என்னை ஆன்ற சொல்லால் மூன்று போதும் செப்பவே ( அவனை) தான் என்னைத் தடுத்து ( ஆட்கொண்டு) மூன்று (தமிழ்) உணர்த்தி நான்றமிழ்செ யேற்பனே - நான் அவனைத் தமிழ் செய்ய (மகிழ்ந்து) ஏற்பான்

படம்  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி