வியாழன், 25 ஏப்ரல், 2024

அமைப்பிற்கு வெண்பா

வினைப்பற்று வேண்டாது மேதினியில் வேலை
நினைப்பெற்று நீங்காது நின்றாற் - றனைப்பற்றுந்  
தாழ்வறியாச் சான்றோரின் றக்க தலைநெறிகள்
வாழ்வறியா மாண்பு வகுத்து


வினைப்பற்று வேண்டாது மேதினியில் வேலை
நினைப்பு எற்றும் நீங்காது நின்றால் தனைப் பற்றும்
தாழ்வு அறியாச் சான்றோரின் தக்க தலை நெறிகள்
வாழ்வறியா மாண்பு வகுத்து   




1 1 1 1
2 2 2 - 3
3 3 3 3
4 4 4

என்ற மோனை அமைப்பில் வெண்பா 

மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை
யோயாம லுள்ளத்தி லுள்வார்க்குத் - தாயாகித்
தந்தையாய்த் தாகந்தீர் தண்ணீருந் தானாகிச்
சிந்தையாள்  சீரளிப்பான் சேய்

 

Murugan, Thiruchendur Murugan, HD phone wallpaper | Peakpx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி