புதன், 29 மே, 2024

முற்றெதுகை மாருதி விருத்தம்

 

தற்பொலிரும் விற்புருவச் சிற்பமென கற்புமக
ணற்கணவன் விற்பொருனன் சொற்பணியுந் தற்கிளைய
னிற்பதற்குப் பொற்புடைய வெற்பெடுத்துச் சொற்பரனு
நற்பணியாய்த் தற்கரத்திற் கற்சுமந்தா னற்புதமே
தற் பொலிரும் வில் புருவச் சிற்பம் என கற்புமகள்
நற் கணவன் வில் பொருனன் சொல் பணியும் தன் கிளையன்
நிற்பதற்குப் பொற்பு உடைய வெற்பு எடுத்துச் சொல் பரனும்
நற்பணியாய்த் தன் கரத்தில் கல் சுமந்தான் அற்புதமே
தன்னாலே பிரகாசமுடைய வில்லைப் போன்ற புருவமுடைய சிற்பம் போன்ற கற்பு மகளின் (சீதையின்) நற் கணவன் வில் பொருனனது (இராமனின்) சொல் பணியும் தனது கிளையான (இலக்குவன்) நிற்பதற்கு (இந்திரஜித்தின் அம்பின் மயக்கம் தெளிந்து) பொற்புடைய வெற்பெடுத்து (அழகான சஞ்சீவி மலையை எடுத்து) நற்பணியாய் தனது
கரத்தில் ஒரு சிறிய கல்லைப் போல சுமந்தான் அற்புதமாய் சொல்லின் செல்வன் (சொற்பரன்)
 
May be a doodle 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...