வெள்ளி, 31 மே, 2024

திருவோடு சிலேடை வெண்பா

திருவோ டுறையுந் திருவே திருவா
மிரவோ டுறையு மிருளா - யரவோ
டரளு மருளே யருளா மருளே
கரவோ டருளு மருள்     

Why does Lord Vishnu live in the waters? - Quora

பொருள் -1

இரவோடு உறையும் இருளாய் திருவோடு உறையும் திருவே திருவாம் :-

திரு ஆகிய மகாலக்ஷ்மியுடன் உறையும் செல்வமே திருமால் தான் , அவர் இரவும் இருளும் போல என்றும் பிரிக்க வியலாத தவாறு கலந்திருப்பார் , 

அரவோடு அருளும் அருளே அருளாம் :-

அவ்விருவரும் சேர்ந்து ஆதி சேஷனுடன் இருந்து மூவருமாக அருளும் அருளே அருளாம் (ஆதிசேஷன் இராமானுசர் என்பதால் திருமாலை அடைவதற்கு  ஆச்சார்ய சம்பந்தத்தின் இன்றியமையாமை  கூறப்பெற்றது ) , 

மருளே கரவோடு அருளும் அருள் :-

கரவோடு (மறைத்து) பிறர் அருளும் அருளெலாம் மருள் என்றறிக

Do you know why Lord Shiva wears mundamala? - Quora

பொருள் -2

இரவோடு உறையும் இருளாய் திருவோடு உறையும் திருவே திருவாம் :-


திருவோட்டில் உறைகின்ற செல்வமே செல்வம் (செல்வ நிலையாமை) இரக்கின்ற அத்திருவோட்டில் ஏதுமிருக்காது என்பதால் இருள் போல் வெறும் வெளியாய் இருக்கும் , 

அரவோடு அருளும் அருளே அருளாம் :- 

அர வோடு (அரனின் வோடு - கபாலி திருக்கோலம், அல்லது அரவும் ஓடும் பூணும் கபாலி சிவபெருமான் என்று ஆகுபெயராய்க் கொள்ளலாம் ) அருளும் அருளே அருளாம்! 

அருளே கர ஓடு அருளும் அருள் :-

அருளே அவன் கரத்தின் இருக்கும் ஓடு அருளும் அருள். அனைத்தையும் துறந்து இறைவனும் அவன் அருளும் ஒன்றே கதி எனவிருப்பதையும் செல்வத்தின் நிலையாமையும் குறிக்கும் படியாக அமைந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி