கோலமர்ந்து கோளகற்று(ங்) கோலவாசு கிளியுடை
ஆலமர்ந்த மௌனநாத னாசிபெற்ற குருபரன்
ஞாலமேழு முண்டுமிழ்ந்த ஞானபால னினைமகிழ்
பாலவேல ஞானநாத னீடுவாழும் பழனியே
கலி விருத்தம்
சீர் பிரித்து
கோல் அமர்ந்து கோள் அகற்றும் கோல ஆசு கிளி உடை
ஆல் அமர்ந்த மௌன நாதன் ஆசி பெற்ற குரு பரன்
ஞாலம் ஏழும் உண்டு உமிழ்ந்த ஞான பாலன் நினை மகிழ்
பால வேல ஞான நாதன் நீடு வாழும் பழனியே
பொருள் :-
செங்கோலின் மீதமர்ந்து தீமைகளைக் அகற்ற வல்ல அழகான ஆசு கவியான கிளியை உடைய (அருணகிரிநாதர் தான் கிளியா யமர்ந்து கந்தரனுபூதி பாடிப் பத்தர்களுக்கு வரும் தீமைகளை அகற்றுகின்றார்)
ஆல மரத்தடியில் அமர்ந்து மௌன குருவாக விளங்கும் தக்ஷிணாமூர்தியின் ஆசி பெற்ற, அவருக்குமே குருவாக விளங்கும் (குருபரன்)
ஞாலமேழும் உண்டு உமிழ்ந்த ஞான பாலனான ஆலினிலை மிதக்கும் சிறுவனான ஸ்ரீமன் நாராயணன் நினைந்து மகிழும்
பாலவேல ஞான நாதன் ( சிறுவன் வடிவில் வேலுடன் நிற்கும் ஞானக் குழந்தை ) என்றும் வாழும் பதி பழினியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக