வியாழன், 20 ஜூன், 2024

நாதமுனிகள் கட்டளைக் கலித்துறை

வீராணந் தோன்றிய வித்தகா நாலா யிரப்பனுவ  
லாரா வமுத  னருளா லகில மனுபவிக்கத்  
தீரா வினைதீர் திருமருந் தேதிவ்ய கானமரு
டீரா திருமால் புகழை நவிலு முனிநாதனே  
#கட்டளைக்கலித்துறை

 

 

படம்



வீராணம் தோன்றிய வித்தகா நாலாயிரப் பனுவல்
ஆரா அமுதன் அருளால் அகிலம் அனுபவிக்கத்
தீரா வினை தீர் திரு மருந்தே திவ்ய கானம் அருள்
தீரா திருமால் புகழை நவிலும் முனி நாதனே

வீராணம் தோன்றிய வித்தகா ! நாலாயிரப் பனுவல் ,
ஆராவமுதன் அருளால் அகிலம் அனுபவிக்க திவ்ய கானம் (ஆக) அருள்,
தீரா வினைதீர் திருமருந்தே, தீரா ! திருமால் புகழை நவிலும் முனி நாதனே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி