வியாழன், 20 ஜூன், 2024

கங்கை கொண்ட சோழன் விருத்தம்

 

மங்கைகொண்ட பாகரேத்தி ராசராசன் மைந்தருந்
தங்கைகொண்டு வங்க(ம்)வென்று வாகைசூடிப் போரிலே
கங்கைகொண்ட சோழனாக காலகால மேத்திட
செங்கைகொண்ட சிற்பிகொண்டு தேர்ந்தமைத்த கோவிலே
 
 
படம் 
மங்கை கொண்ட பாகரான ஈசனை ஏத்தும் பக்தனான இராசராசச் சோழனின் மகனான இராசேந்திரச் சோழன் தமது திறத்தால் வங்கதேசத்தை வென்று போரில் அங்கிருந்த கங்கையைத் தென்னாட்டிற்குக் கொண்டு வந்து கங்கை கொண்ட
ச் சோழன் எனப் பேர்பெற்று அப்படி ஒரு ஊரையுமமைத்து எல்லா காலமும் போற்றும்படியாக செம்மையான கைத்திறம் கொண்ட சிற்பிகளை வைத்து தேர்ந்து அமைத்த கோவிலிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி