செவ்வாய், 30 ஜூலை, 2024

சீறுமாறு கலி விருத்தம்

சீறுமாறு மாறுமாறு சீருதித்த நாதனை
யாறுமாற வன்புலாவ வாகமாவி யாழவே
கூறுமாறு வேதமோத கூற்றொடுங்கக் கூடுமே
யீறுமாறு வானுலாவ வேகமூர்த்தி கையிலே



சீறும் ஆறு மாறும் ஆறு சீர் உதித்த நாதனை
ஆறும் மாற அன்பு உலாவ ஆகம் ஆவி ஆழவே
கூறும் ஆறு வேதம் ஓத கூற்று ஒடுங்கக் கூடுமே
ஈறும் ஆறு வான் உலாவ ஏக மூர்த்தி கையிலே

சீறும் ஆறான கங்கை நதியை மாறும் படி (தணியும் படி) செய்த சீராக உதித்த வாமனனின்
ஆறும் மாற (பாதை நல்வழியாய் மாற) அன்பு உலாவ (வாழ்வில் அன்பு உலாவ) உடலும் உயிரும் ஆழ
அவன் பெயரைக் கூறும் ஆறான வேதம் ஓத கூற்று ஓடுங்கக் கூடுமோ? அது நம் முடிவல்ல , என்றாலும்
ஈறும் ஆறு ( இறுதியில் இறப்பு வரும் போது ) நாம் வானுலாவ ( இறைவனின் அடியைச் சென்றடைய) ஏகமூர்த்தியான இறைவன் அவன் நம்மைக் காப்பான்! அது அவன் கையில் உள்ளது

முதல் அடியைச்  சீறும் ஆறும் ஆறும் ஆறு என்று கொண்டால் ( சீறும் கங்கை ஆறு சிவபெருமானின் நெற்றியில் உதித்த பொறியின் சூடு தாங்காமல் ஆறிய பின் சீர் உதித்த முருகனைக் குறிக்கும்)

Radha - 🌺Happy Vamana Dwadashi ...Murugan: His Astonishing Birth and ...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி