கண்ணிலே பிறந்துவந் தடங்குகின்ற காட்சிபோல்
மண்ணிலே பிறந்திருந் தடங்குகின்ற வாழ்க்கைபோல்
பண்ணுளே யிருந்துயர்ந் தடங்குகின்ற பாட்டைப்போ
லெண்ணிலா பிறந்திருந் தடங்குமுன்னு ளீசனே
கண்ணிலே பிறந்து உவந்து அடங்குகின்ற காட்சிபோல்
மண்ணிலே பிறந்து இருந்து அடங்குகின்ற வாழ்க்கைபோல்
பண்ணுளே இருந்து உயர்ந்து அடங்குகின்ற பாட்டைப்போல்
எண்ணில் ஆ பிறந்து இருந்து அடங்கும் உன் உள் ஈசனே
கண்ணுள்ளே பிறக்கின்றது, இரசிக்கப் படுகின்றது பின் அடங்குகின்றது காட்சியானது (அகக்கண் என்றும் கொள்ளலாம்)
இப்பாரில் வாழ்க்கை என்பது மண்ணிலே (ஐம்பூதங்களின் சேர்க்கை ஊடாக) பிறந்து , இங்கே தங்கி , பின் மண்ணுக்குள்ளே அடங்குகின்றது
ஒரு பாட்டு அதன் அடிப்படை பண்ணில் பிறந்து , உயர்ந்து பின் அடங்குகின்றது
அதே போல் எண்ணிக்கை இல்லா உயிர்கள் உன்னுள் பிறந்து இருந்து பின்பு அடங்குகின்றது ஈசனே!
ஓசையும் கருத்தும் "தன்னுளே திரைத்தெழும்" எனத் தொடங்கும் திருச்சந்த விருத்ததின் அடியொற்றி அமைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக