திங்கள், 29 ஜூலை, 2024

ஆடிக் கிருத்திகை வெண்பா

ஆடிக் கிருத்திகைக் காலயஞ் சென்றுவர
வாடித் துகளாகும் வாட்டமெலாம் - பாடுபுகழ்
நான்முகன் கையெழுத்தை நாதர்க் கழித்தருளு
மான்மருக னன்களிப்பான் வாழ்வு

#வெண்பா

படம்

ஆடிக் கிருத்திகைக்கு ஆலயம் சென்று வர
வாடித் துகள் ஆகும் வாட்டம் எல்லாம் பாடு புகழ்
நான் முகன் கையெழுத்தை நாதர்க்கு அழித்து அருளும்
மால் மருகன் நன்கு அளிப்பான் வாழ்வு

ஆடிக் கிருத்திகைத் தினத்தன்று ஆலயம் சென்று வர
(நமது) துயரெல்லாம் வாடித் துகளாகும் திருப்புகழ் பாடும்
அருணகிரிநாதருக்கு நான்முகனின் கையெழுத்தை அழித்து அருளும்
மால் மருகன் நன்றாக அளிப்பான் வாழ்வு (நமக்கு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி