திங்கள், 29 ஜூலை, 2024

பிறைசூடி பார்ப்பதி வெண்பா

பிறைசூடி பார்ப்பதி பிள்ளை ப்ரணவ
முறையோது மூப்பின் முருகா - குறைவாடும்
பேடி திருந்தப் புகழ்பாடும் பேறளி
யாடிக் கிருத்திகை யன்று
#வெண்பா

படம்

பிறை சூடி பார்ப்பதி பிள்ளை ப்ரணவம்
முறை ஓதும் மூப்பில் முருகா குறை வாடும்
பேடி திருந்தப் புகழ் பாடும் பேறு அளி
ஆடிக் கிருத்திகை அன்று

பிறசூடியான சிவன் மற்றும் பார்வதியின் திருக்குமரா பிரணவம் முறையாக ஓதும் மூப்பு இல்லாத முருகா! குறையினால் வாடும் இப்பேடியைத் திருந்த உனது திருப்புகழைப் பாட அருளளி ஆடிக் கிருத்திகைத் தினத்தன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி