புதன், 10 ஜூலை, 2024

திருவடிக் கலித்துறை

அருந்துங்கா றீண்ட வகலிகை பெற்றா ளழகுருவ
மருந்துங்கா றீண்ட வரச னடைந்தா னழியாப்புக
ழருந்துங்கா றீண்ட வடங்கா நதியு மகிலம்வர
வருந்துங்கா றீண்ட லடியா ரணிவா ரகத்தழகே

கட்டளைக் கலித்துறை 




சீர் பிரித்து

அரும் தும் கால் தீண்ட அகலிகை பெற்றாள் அழகு உருவம்
அரும் தும் கால் தீண்ட அரசன் அடைந்தான் அழியாப் புகழ்
அரும் தும் கால் தீண்ட அடங்கா நதியும் அகிலம் வர
அரும் தும் கால் தீண்டல் அடியார் அணிவார் அகத்து அழகே

அரும் தும் கால் - அரிய காலின் தூசி
முதலடி  இராமரையு மிரண்டாமடி வாமனரையும் மூன்றாமடி திருமாலின் பாதத்தின் வந்த கங்கையையும் அப்பேற்பட்ட விஷ்ணு பாத சின்னத்தைத் தன்னகத்தே தாங்கும் அடியார்களையும் நான்காமடி குறிக்கின்றது  

Vamana - WikipediaRama Brings Ahalya Back to Her Living FormLord Vishnu and river Ganga ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...