வியாழன், 26 செப்டம்பர், 2024

அம்மையப்பார் விருத்தம்

 

அம்மையப்பர் சேவைதன்னி லாழ்ந்தபுண்ட ரீகனை
வந்தடைந்து வாசனின்று மானுடர்போல் வேடமிட்
டம்மையப்பர் சேவைவேண்ட காத்திருக்கச் சொல்லிதன்
செம்மையுற்ற வீன்றபெற்றோர் பக்திசேவை செய்தபின்
றம்மையண்டிச் சேவைவேண்டிக் காத்திருந்த மாந்தரைத்
தங்கள்வேண்டு தேவையெண்ணி கேட்டமைந்த னின்புற
மும்மையாளு மம்மையைப்பர் நாங்களென்று ரைத்தவு
ருப்பிணிச்ச மேதனின்ற விட்டலாளு மூரிதே
எண்சீர் விருத்தம்
 
 
சீர் பிரித்து
அம்மை அப்பர் சேவை தன்னில் ஆழ்ந்த புண்டரீகனை
வந்து அடைந்து வாசல் நின்று மானுடர் போல் வேடம் இட்டு
அம்மை அப்பர் சேவை வேண்ட காத்து இருக்கச் சொல்லி தன்
செம்மை உற்ற ஈன்ற பெற்றோர் பக்தி சேவை செய்த பின்
தம்மை அண்டி சேவை வேண்டிக் காத்து இருந்த மாந்தரைத் தங்கள் வேண்டு தேவை எண்ணி கேட்ட மைந்தன் இன்புற
மும்மை ஆளும் அம்மை அப்பர் நாங்கள் என்று உரைத்த உருப்பிணிச் சமேத விட்டல் ஆளும் ஊர் இதே
மும்மை - இம்மை மறுமை முத்தி
அம்மையப்பர் - கிருஷ்ண உருப்பிணி (ருக்மிணி)
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி