ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

யாவுமுள்ள ஈசன் கலி விருத்தம்

யாவுமுள்ள ஈசனென்னை வேண்டிநின் றிரந்தனன்
மாவலிக்கு வாய்த்ததென்ன வாமனர்க் களித்திட
பாவபுண்ணி யத்துடைத்த பாசமேவு மென்னையே
நீவொடுக்க வந்தநீர்மை நேரிலாத நீர்மையே

 மாவலியின் கூற்று 

யாவுமுள்ள ஈசன் என்னிடம் வந்து இரந்து நின்றனன் ,

அவனிடம் அளிக்க என்னிடம் (மாவலியிடம்) என்ன உள்ளது?

அதனால் என்னிடம் உள்ள பாவம் புண்ணியம் ஆகிய பாசத்தை 

அவன் மொத்தமாக வாங்கிக் கொள்ள வந்தான் , என்னே அவன் நீர்மை 

என அறிந்து கொண்டேன் !

படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...