திங்கள், 16 செப்டம்பர், 2024

விருத்த வேட கலி விருத்தம்

 விருத்தவேட மாண்டுவந் திபத்தையேவி கானதிற்
கருத்தகூந்த றேன்மொழிக்  குறத்திவள்ளி காதலி
லிருத்தவேட வேலவா விரங்கிவந்த தென்கொலோ
கருத்தமேக மென்னநின் கணக்கிலாத வன்பலோ 

 

 சீர் பிரித்து

விருத்த வேடம் ஆண்டு வந்து இபத்தை ஏவி கான் அதில்
கருத்த கூந்தல் தேன் மொழி குறத்தி வள்ளி காதலில்
இருத்த வேட வேலவா இரங்கி வந்தது என் கொலோ
கருத்த மேகம் என்ன நின் கணக்கு இ(ல்)லாத அன்பு அ(ல்)லோ  

 பொருள் 

விருத்தனாக வேடமிட்டு ஆனையை ஏவி காட்டில்
கருத்த கூந்தலை உடைய தேன் போன்று மொழி உரைக்கும் குறத்தியான வள்ளியைக்
காதலில் இருத்த வேலவா நீ இரங்கி வந்தது என்ன வியப்பு!
கார்மேகம் போன்ற அளவற்ற கருணை கொண்டவன் நீ அன்றோ உயிர்களின் மேல்!
வள்ளி அம்மையாரின் மீது நீ கொண்ட காதலும் அன்பும் உயிர்களை ஆட்கொள்ள
அன்பினால் நீ எடுக்கும் முயல்விற்கு உருவகம் என்பது  கருத்து 

Murugan and Valli Romance
 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...